கோவிலுக்கே போகாத முதலமைச்சர் எதுக்கு..? அதிகாரம் இருந்திருந்தால் அமைச்சர் சேகர் பாபுவை ஜெயில்ல போடுவேன் ; பொன்.மாணிக்கவேல் ஆவேசம்

Author: Babu Lakshmanan
1 January 2024, 6:21 pm

தமிழக அரசு மத்திய அரசு உதவியோடு அமெரிக்க நாட்டில் தொன்மையான சாமி சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இந்து முண்ணனி சார்பில் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் இருந்து பழனிமலை கோவில் வரை வேல் யாத்திரை கொண்டு செல்லும் வகையில் வேல் வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதினங்கள், திரைப்பட நடிகர் கங்கை அமரன், ரஞ்சித் மற்றும் காவல்துறையில் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுப்பிரமணிய சுவாமி கோவில் கொடி மரம் முன்பு வைத்து முருகனின் வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருவாசகம் பாடி வழிபாடு செய்தனர்.

இதையடுத்து சென்னிமலை கோவில் இருந்து வேல் யாத்திரை மூலம் பழனிமலை கோவிலுக்கு முருகன் பக்தர்கள் கையில் வேலுடன் யாத்திரை சென்றனர். இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேசியதாவது ;- ஆன்மிகம் அதிகமாக குற்றங்கள் குறையும் வீடுகளில் அமைதி நிலவும். இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் மூலம் 28 கோடி ரூபாய் அரசு வருமானம் ஈட்டி வருகிறது. உண்டியலில் எத்தனையோ லட்சம் ரூபாய் வந்தால் கூட அதையெல்லாம் சொற்ப காசுகள் தான்.

கோவில் அனைத்தும் செய்யும் அர்ச்சகர்கள் 12 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூட ஊதியம் வழங்காமல் அரசு உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு ஒரு வெளக்கமாறு சொத்து கூட இல்லை. எல்லாம் சைவ வைணவ கோவில் சொத்துக்கள் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்கள் இந்து அறநிலை துறைக்கு உள்ள நிலையில், தாங்கள் போடுவதாக தவறான தகவல்களை அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அரச பொறுத்தவரை எந்த ஒரு நிதியும் ஒதுக்கீடு செய்து கோவில்களை பராமரிப்பதில்லை.

இந்து அறநிலைத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் கிடையாது. கோவில்களின் சேவகர்களாக கருதப்படுவார்கள். கோவில் திருப்பணி போது ஒவ்வொரு பணிக்கும் கமிஷன் பெறப்படுகிறது. கோவில் புறநானிப்பு என்ற பெயரில் கோவில்களில் உள்ள தொன்மையான கல்வெட்டுகள் அளிக்கப்படுகிறது. இதனால் கோவில் திருப்பணிகள் மற்றும் புரனையமைப்பு பணிகளை மாநில தொல்லியல் துறையினர் மேற்கொள்ள வேண்டும் அப்படி அவர்கள் செய்வதன் மூலம் கோவில்களின் பழமையான தொன்மை பாதுகாக்கப்படும்.

தமிழகத்தில் இந்து அறநிலைத்துறையில் இதே நிலைமை நீடித்தால் வரும் 15 ஆண்டுகளில் 26 ஆயிரம் கோவில்களில் கடந்த பல வருடங்களாக பராமரிக்க அர்ச்சகர்கள் இல்லாத நிலை உருவாகும். 2012 ஆம் வருடம் மட்டும் அமெரிக்க நியூயார்க் நகரில் இருந்து 2 ஆயிரத்து 662 சிலைகள் மீட்கப்பட்டுள்ள இந்த சிலைகள் மதிப்பு ஆயிரத்து 20கோடி ரூபாயாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள சிலைகளை தமிழக அரசு மத்திய அரசு மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தூங்காமல் விழித்து கொள்ள வேண்டும்,வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை அந்த பதவியில் போடக்கூடாது, இந்த பிரிவுக்கு வருபவர்கள் நேர்மையான அதிகாரியாக இருக்க வேண்டும். ஆர்வத்துடன் பணியாற்றும் அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும். 38 ஆயிரத்துக்கு மேல் கோவில்கள் உள்ள நிலையில் ஒரு கோவிலுக்கு கூட வராத முதல்வர் வேண்டாம்.

நான் மட்டும் மீண்டும் அதே பொறுப்பில் இருந்து வேலை பார்த்தால் இந்து அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் உள்ளே வைத்து விடுவேன். நான் விளம்பரத்துக்காக எதுவும் வேண்டாம் நானும் அதை செய்யவில்லை, என தெரிவித்துள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!