ஆம்பளையாக இருந்திருந்தால் செந்தில் பாலாஜி இதை செய்திருக்கக் கூடாது..? ஜெயக்குமார் சொன்ன கருத்து..!!
Author: Babu Lakshmanan15 June 2023, 2:37 pm
சென்னை ; டிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன 30 ஆயிரம் கோடி தொடர்பாகவும் விரைவில் விசாரணை நடைபெற இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- விரக்தியின் உச்சகட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகிறார். பல்வேறு குற்றச்சாட்டுகளில் செந்தில் பாலாஜி போக்குவரத்து ஊழல் வழக்கில் போக்குரத்து துறை அமைச்சராக இருந்தபோது மறைந்த முன்னாள் முதலைச்சர் ஜெயலலிதா பதவியிலிருந்து நீக்கினார். சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூறினார். அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தது திமுக அரசு. அதனால் தான் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு தக்க விசுவாசம் காட்டி வருகிறார்.
கனிமொழி, ராஜா ஆகியோரை கைது செய்யும் போது அமைதியாக இருந்த திமுக, தற்போது செந்தில் பாலாஜி கைதில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை துடிக்கின்றனர். 2016ல் தலைமை செயலாளர் அறையில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதை சட்டம் தன் கடமையை செய்கிறது எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனையால் துடிப்பது ஏன்…?
விசாரணையை தைரியமாக எதிர் கொள்ள வேண்டியது தானே. நெடுஞ்சாலைத்துறை மீதான 4000 கோடி ஊழல் தொடர்பாக எடப்பாடியார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆர்.எஸ் பாரதி அந்த வழக்கை வாபஸ் பெற்றதை அறியாதவராக இருக்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
பொய்குற்றசாட்டுகளை வேண்டுமென்றே எடப்பாடியார் மீது சுமத்துகிறார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன 30 ஆயிரம் கோடி தொடர்பாகவும் விரைவில் விசாரணை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி ஆம்பளையாக இருந்திருந்தால் அழுதிருக்கக் கூடாது. அழுது புரண்டு புலம்பலாமா?
பொதுவாக 30 வயது மேல் பொதுவாக நெஞ்சுவலி வருவது வழக்கம். 30 சதவீதம் அடைப்பு உள்ள ஒருவருக்கு ஆஞ்சியோ கிராம் சிகிச்சை அளிப்பது தமிழகத்தில் தான் நடக்கிறது. தமிழ்நாட்டு ஜீவாதார பிரச்சனைகளை தீர்த்தது அதிமுக அரசுதான். 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எந்த பரச்சனை பற்றியும் பேசியது கிடையாது.
காவேரி நதிநீர் பிரச்சனை குறித்து அவர்கள் விவாத்த கிடையாது. பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது அதிமுக தான். கச்சைதீவை தாரை வார்த்தது திமுக அரசு தான். மாநில சுயாட்சி கூட்டாட்சி பற்றிய பேச திமுக அரசுக்கு அறுகதி இல்லை. நீட் தேர்வு ரத்து ஆகியதா?. ஒற்றை கல் நாயகன் எங்கு சென்றார் எனத்தெரியவில்லை.
மா.சுப்பிரமணியன் பக்கத்துவீட்டு மனையையே அபகரித்தவர். மனைவியின் தகப்பன் பெயரையே மாற்றியவர் தான் மா.சுப்பிரமணியன், குடும்பத்தோடு விசாரணைக்கு சென்றவர்கள். செந்தில் பாலாஜி கைது சம்பவம் தமிழக மக்களுக்கு தலைகுனிவு. அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து விலக்க வேண்டும், என தெரிவித்தார்.