சாலையில் மயங்கி கிடந்த மனைவி… செய்வதறியாமல் தவித்த கணவர்.. ஓடோடி வந்து உதவிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

Author: Babu Lakshmanan
24 July 2023, 10:00 pm

சாலையில் திடீரென மயங்கிய மனைவியை தாங்கிப் பிடித்தபடி கணவன் பதறிய நிலையில், அவர்களுக்கு ஓடோடி வந்து தண்ணீர் கொடுத்து உதவிய முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறூ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருச்சியில் உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருச்சி சென்று கொண்டிருந்தார் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர்.

அப்போது மாத்தூர் அருகேயுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே சென்று கொண்டிருந்த போது, ஒருவர் தன் மனைவியை மடியில் படுக்க வைத்து அழுது கொண்டிருந்தார்.

இதனை கண்ட முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் உடனே வாகனத்தில் இருந்து இறங்கி பார்த்தார். அப்போது, பேச்சு மூச்சில்லாமல் கிடந்த அந்த பெண்ணுக்கு கால், கைகளை நன்றாக தேய்த்து விட்டு, தண்ணீர் தாகமெடுத்து தண்ணியின்றி நெடுஞ்சாலையில் மயங்கி கிடந்த பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்து, முதலுதவி செய்து செலவிற்கு பணம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

பின்னர், அவர்களிடம் விசாரித்த போது கணவர் மனைவி இருவரும் கூலி வேலைக்கு செய்ய திருச்சி சென்று சொந்த ஊரான கீரனூர் அருகேயுள்ள சவேரியார்பட்டினம் திரும்பியதாகவும், மயக்கமடைந்த பெண்ணின் பெயர் தேவி என்று கூறினார்கள்.

முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர் தக்க சமயத்தில் உதவிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது லைரலாக பரவி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ