பாஜக ஒரு சைத்தான்… செத்தாலும் இனி கூட்டணி கிடையாது : திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
18 October 2023, 11:32 am

பிஜேபி என்ற சைத்தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்ததில் நாங்கள் நூறு மடங்கு மகிழ்ச்சி என்றால், எடப்பாடி பழனிசாமி ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியாக உள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக கட்சியின் 52 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திண்டுக்கல் பேகம்பூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக கழக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பின்னர் பேசியதாவது :- பாஜக என்ற சைத்தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்ததில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். நாங்கள் நூறு மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று சொன்னால் அதே நேரம் கூட்டணியில் இருந்து விலகியதற்கு எடப்பாடி பழனிசாமி ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியாக உள்ளார். நாங்கள் மீண்டும் பிஜேபியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாக எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என நாங்கள் கூறிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் 10 பேர் இருக்கின்ற பிஜேபி கட்சியினர் அடுத்த முதல்வர் அண்ணாமலை என கூறுகின்றனர். அதிமுகவால் தான் பிஜேபி தமிழகத்தில் வளர்ந்துள்ளது. பிஜேபியால் அதிமுக வளரவில்லை.

பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் தான் தமிழகத்தில் வெற்றி கிடைக்கும் என்ற சூழ்நிலை எங்களுக்கு கிடையாது. இனி நாங்கள் செத்தாலும் பிஜேபி பக்கமோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ள யார் கூடேயும் கூட்டணி வைக்க மாட்டோம், எனக் கூறினார்.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 366

    0

    0