இந்திய அளவில் ஊழல் கட்சியான திமுக.. அடிச்சு தூக்கிய பிரதமர் மோடி; அப்ளாஸ் கொடுத்த ஜெயக்குமார்..!!!

Author: Babu Lakshmanan
11 August 2023, 12:49 pm

தமிழ்நாடு அளவில் திமுக குறித்து அதிமுக பேசிய நிலையில், இந்திய அளவில் திமுக குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்தது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- நாடளுமன்றத்தில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக மீது கடும் விமர்சனத்தை வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அளவில் ஊழல் கட்சி என இருந்த திமுகவை இந்திய அளவில் ஊழல் கட்சி என பிரதமர் பேசியுள்ளது. சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியவர் திமுகவினர்.

தமிழ்நாடு அளவில் திமுக குறித்து அதிமுக பேசிய நிலையில், இந்திய அளவில் பிரதமர் மோடி திமுக குறித்து விமர்சனம் வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மணிப்பூர் கலவரத்தில் பெண்களை இழிவு படுத்தியவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். கச்சத்தீவை தாரைவார்த்து மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்பது ஏற்புடையதல்ல.

தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தி சமஸ்கிருதம் படிக்க முடியாத நிலை இருந்தது என நிர்மலா சீதாராமன் கூறியது அவரது கருத்து. இந்தி, சமஸ்கிருதம் எந்த விதத்திலும் நுழையாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது, என தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ