தமிழ்நாடு அளவில் திமுக குறித்து அதிமுக பேசிய நிலையில், இந்திய அளவில் திமுக குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்தது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- நாடளுமன்றத்தில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக மீது கடும் விமர்சனத்தை வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அளவில் ஊழல் கட்சி என இருந்த திமுகவை இந்திய அளவில் ஊழல் கட்சி என பிரதமர் பேசியுள்ளது. சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியவர் திமுகவினர்.
தமிழ்நாடு அளவில் திமுக குறித்து அதிமுக பேசிய நிலையில், இந்திய அளவில் பிரதமர் மோடி திமுக குறித்து விமர்சனம் வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மணிப்பூர் கலவரத்தில் பெண்களை இழிவு படுத்தியவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். கச்சத்தீவை தாரைவார்த்து மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்பது ஏற்புடையதல்ல.
தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தி சமஸ்கிருதம் படிக்க முடியாத நிலை இருந்தது என நிர்மலா சீதாராமன் கூறியது அவரது கருத்து. இந்தி, சமஸ்கிருதம் எந்த விதத்திலும் நுழையாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது, என தெரிவித்துள்ளார்.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.