அதிமுக வாக்காளர்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு முன்வைத்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது :- நாங்கள் எப்பொழுது பண நாயகத்தை நம்பி இல்லை. ஜனநாயகத்தை நம்பி தான் இருக்கிறோம். பாஜக மற்றும் திமுக பணத்தை நம்பி தான் இருக்கிறார்கள். இந்த இரு கட்சியினரும் பணத்தின் மூலம் வாக்குகளை பெற்றுக் கொள்ளலாம் என நப்பாசையில் உள்ளனர்.
மேலும் படிக்க: திமுக ரூ.2,000…. அதிமுக ரூ.1,000…. பணப்பட்டுவாடா ஜரூர் ; பாஜகவினர் புகார்..!!!
கொள்ளையடித்த பணத்தைதான் வாக்காக மக்களிடம் வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தேவையான வேட்பாளருக்கு வாக்கு செலுத்த உள்ளனர். வடசென்னையின் பொறுப்பாளராக நான் வடசென்னை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தேன்.
அதிமுக-விற்கு வாக்களிக்கும் நபர்களை குறி வைத்து வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் நீக்கப்படுகிறது.தேர்தல் அதிகாரிகள் இந்த தேர்தலில் அது போன்று நடைபெறாமல் தடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன், எனக் கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.