சென்னை ; முதலமைச்சராக இருந்த போது எடப்பாடி கே பழனிச்சாமி வெளிநாட்டு பயணத்தில் அவரது மகனும் சென்றார் எனக் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிராக அதிமுக சட்ட நடவடிக்கை எடுக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் திருவிக நகர் தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- இன்றைக்கு எடப்பாடி தலைமை ஏற்று 2 கொடி தொண்டர்களக உருவாக வேண்டும் என்று உறுப்பினர் சேர்க்கை தமிழ் நாடு முழுவதும் நடைபெறுகிறது. நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவில் எதிர்கட்சி தலைவர் கலந்து கொள்வதற்கு அழைப்பு வந்துள்ளது. கலந்து கொள்வது குறித்து அவர் முடிவெடுப்பார்.
19 கட்சிகள் புறக்கணிப்பு குறித்து எங்களுக்கு தேவை இல்லை. எங்களுக்கு அழைப்பு வந்தது, நாங்கள் கலந்து கொள்கிறோம். ஸ்டாலின் வெளிநாடு பயணம் போட்டோ ஷூட் செய்வதற்கு சென்றது போல உள்ளது. கொரோனா காலத்தில் அதிமுக ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை கொண்டு வந்தது.
ஸ்டாலின் காலையிலும் பொய் பேசுகிறார், மாலையிலும் பொய் பேசுகிறார். வாயை திறந்தாலே பொய் மட்டுமே பேசுகிறார். ஆட்சிக்கு வந்து 700 நாள்கள் மேல் ஆகுது. எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள்…?. இவர்களது ஆட்சியில் கடலூரில் ஒரு சிறுமி பாலியல் துன்புறுத்தல் நிகழ்வு நடைபெற்றது. எடப்பாடி கே பழனிச்சாமி ஆட்சியில் மக்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி தான் தமிழக மக்களின் தொழில் வளர்ச்சிக்கு பொற்காலம்.
செங்கோல் என்பது தமிழ் நாட்டின் தொன்மை தொட்டு அடையாளமாக காணப்படுகிறது. தமிழன் பெருமை தமிழ் நாட்டின் பெருமை. இதில் அரசியல் செய்யக் கூடாது. மக்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.
எழுச்சியாக பேரணி மூலம் சட்ட ஒழுங்கு மற்றும் கள்ள சாராயம் குறித்து ஆளுநரிடம் தொகுத்து கொடுத்துள்ளோம். கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கிளைக் கழக செயலாளர் ஆக இருந்து ஒன்றிய செயலாளராக, மாவட்ட செயலாளராக, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என இன்று பொதுச் செயலாளராக படிப்படியாக உயர்ந்துள்ளார்.
துரோகத்தின் அடையாளம் கருணாநிதிதான். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மூலமாக தான் கருணாநிதி அடையாளம் காணப்பட்டார். திமுக தமிழை வைத்து வியாபாரம் செய்கிறது. உலக தமிழ் பல்கலைகழகம் MGR ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஒரு பக்கம் தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள்.
மத்திய அரசின் கொத்தடிமையாக திமுக செயல்படுகிறது.அதிமுக ஆட்சியில் முதலீடு குறித்த வெள்ளையறிக்கை வெளியிட தயார். 2 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலை வழங்கினார்கள் என்று கூற வேண்டும். பத்து ரூபாய்க்கு ஒரு பாட்டில் வாங்குற அமைச்சர் உலகத்தில் இருப்பார்களா..? தங்கமணி அமைச்சராக இருந்த போது ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க வில்லை. தமிழ் நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் குடிப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் செய்துள்ளது, என தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.