கள்ளச்சாராயத்தை தடுக்க போலீசுக்கு எங்க நேரமிருக்கு… ஐபிஎல்-ஐ பார்க்கும் CM குடும்பத்திற்கு பாதுகாப்பு தருவதில் தான் கவனம் ; ஜெயக்குமார் காட்டம்..!!

Author: Babu Lakshmanan
15 May 2023, 1:56 pm

திருவள்ளுவர் அளவுக்கு கடலில் கலைஞரின் பேனாவிற்கு சிலை வைப்பதற்கு என்ன அவசியம். கடலில் பேனா சிலை வைப்பதினால் சிறிய கடல் வாழ் உயிரினங்கள் வரத்து குறைய ஆரம்பிக்கும்.

கடலில் பேனா வைத்ததற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தது தவறு என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மனு அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை அழித்து இந்த அளவுக்கு ஒரு பேனா நினைவுச் சின்னம் தேவையா..? கடலில் பேனா வைப்பதற்கு இடம் இருக்கிறது. காலம் காலமாக நொச்சிக்குப்பம் பகுதியில் மீன் வியாபாரம் செய்யும் மீனவர்களுக்கு இடமில்லை.

திமுக அரசை பொருத்தவரை நாடு சுடுகாடு ஆனாலும் பரவாயில்லை என்பது போல் செயல்பட்டு வருகிறது. மக்களுடைய மனநிலையை புரிந்து கொள்ளாமல் மக்களுக்கு வேதனை அளிக்க கூடிய காட்டாட்சி நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக்கொண்டு தமிழகத்தில் சாராய மாடல் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எந்தவித முன்னெச்சரிக்கையும் சோதனையும் இல்லாமல் ஆளுங்கட்சியும், போலீசாரும் கைகோர்த்ததன் விளைவு தான் இன்று கள்ளச்சாராயத்தினால் இத்தனை பேர் இறந்துள்ளனர். சூடு சொரணை ரோஷம் இருந்தால் ஸ்டாலின் ஆட்சி நடத்த தெரியவில்லை என பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக முதல்வரின் குடும்பம் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பார்ப்பதற்கு பாதுகாப்பு அளிக்கும் வேலையில்தான் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.

நாட்டு மக்களின் அமைதிக்கோ, சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கோ இந்த அரசு செயல்படவில்லை குறிப்பாக போலீசார் செயல்படவில்லை. 14 பேர் இறந்த பிறகு கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது சோதனை நடத்துவது எதற்கு.?

நாட்டில் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தால்தான் விழிப்புணர்வாக இருப்பார்களா..? தமிழகத்தில் சாராய மந்திரி செந்தில் பாலாஜி என ஒருவர் இருக்கிறார். அவரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பத்து வருடங்களாக எங்களது ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லை. மாநில அளவில் பாஜக உடனான கூட்டணி தொடரும், எனக் கூறினார்.

  • Arya and Santhanam reunion வைரலாகும் NEXT LEVEL போஸ்டர்:10 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஆர்யா- சந்தானம்…எந்த படம்னு தெரியுமா..!