என்ன பண்ணீட்டு இருக்கீங்க… உத்தரவு போட்டு 13 மாதங்கள் ஆயிடுச்சு ; மத்திய உள்துறை செயலருக்கு ஜெயக்குமார் பரபரப்பு கடிதம்..!!

Author: Babu Lakshmanan
24 June 2023, 12:04 pm
Quick Share

தன் மீதான கைது நடவடிக்கையின் போது அத்துமீறிய போலீசார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மத்திய உள்துறை செயலருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, வாக்குச்சாவடிக்குள் அத்துமீறிய திமுகவைச் சேர்ந்த நபரை, சட்டையை கழற்ற வைத்து அரை நிர்வாணமாக அழைத்து சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர், 19 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, ஜாமீனில் வெளியே வந்தார்.

அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொய் வழக்கில் தன்னை கைது செய்ததாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடிதம் எழுதியிருந்தார்.

பிரதமருக்கு கடிதம் எழுதி ஒரு ஆண்டை கடந்த நிலையில், மத்திய உள்துறை செயலாளருக்கு ஜெயக்குமார் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த ஆண்டு தான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு மாநில காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டது. ஆனால், 13 மாதங்கள் ஆன பிறகும், டிஜிபியிடம் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது செயலற்ற தன்மையை காட்டுகிறது. எனவே, மத்திய அரசு தனது கடிதங்கள் மூலம் பிறப்பித்த உத்தரவுகளை மாநில அரசு செயல்படுத்தாததாலும், அதற்கு கீழ்ப்படியாததாலும், மத்திய உள்துறை அமைச்சகம், இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 401

    0

    0