அது PRINTING MISTAKE : நாங்க அதிமுக… முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் : பாஜகவுக்கு செய்தி சொன்ன ஜெயக்குமார்!!

Author: Babu Lakshmanan
2 February 2023, 4:20 pm

சென்னை : வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை தாங்கள் பின் வைக்க மாட்டோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு தொகுதியில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்காளர்கள் இல்லாமல் வெறும் வாக்குகள் மட்டும் உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளது. பேனர் விவகாரம் தெரியாமல் ஏற்பட்ட எழுத்துபிழை.

நாங்கள் தான் அதிமுக, ஓ.பன்னீர்செல்வம் ஒரு மண்குதிரை. கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் மீனவர்களும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். பேனா நினைவுச் சின்னத்தை அண்ணா அறிவாலயத்தில் அமைத்துக் கொள்ளலாம், எனக் கூறினார்.

பாஜக வேட்பாளர் அறிவித்தால் ஓ. பன்னீர்செல்வம், தங்களது வேட்பாளர்களை திரும்ப பெற்று கொள்வதாக தெரிவிக்கும் நிலையில், தங்களது வேட்பாளரை திரும்பி பெறுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார்,”நாங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்” என்றார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…