குட்டக் குட்ட குனியும் கட்சி அதிமுக அல்ல… எந்த முடிவாக இருந்தாலும் நாங்க தான் எடுப்போம் : அண்ணாமலை பேச்சுக்கு ஜெயக்குமார் பதில்!!

Author: Babu Lakshmanan
18 March 2023, 4:21 pm

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பமில்லை என்று கூறிய அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விருப்பமில்லை என்றும், ஒருவேளை கூட்டடணி அமைந்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று பகிரங்கமாக கூறினார்.

அவரது இந்தப் பேச்சுக்கும் அதிமுக தரப்பில் எதிர்வினையாற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- அதிமுகவுக்கு என்று தனித்தன்மை உள்ளது. குட்டக் குட்ட குனியும் கட்சி அதிமுக அல்ல. எங்களை யாரும் குட்ட முடியாது. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிமுக முடிவெடுக்கும். தேர்தல் கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது குறித்து அதிமுக தான் முடிவு செய்யும். அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும், என்றார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 461

    0

    0