இந்த அளவுக்கு சொதப்பி பார்த்ததே இல்ல… வடிவேலு மாதிரி காமெடி பண்ணுகிறார் அண்ணாமலை ; ஜெயக்குமார் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
23 April 2024, 2:11 pm

எந்த காலத்தில் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் சொதப்பி வருவதாகவும், தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டதாக தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சென்னை நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தென் சென்னை, மத்திய சென்னை வடசென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள நாடாளுமன்ற தொகுதிகளை சார்ந்த வேட்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கப்பின் இன்று நேரில் சந்திக்கின்றனர்.

மேலும், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, பொன்னையன் உள்ளிட்ட சென்னை மற்றும் சுற்றியுள்ள தலைமை கழகச் செயலாளர்களும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :- நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் ஒரு எழுச்சியாக அலை கண்டறியப்பட்டது. மகத்தான வெற்றியை ஜூன் நாலாம் தேதி தமிழக மக்கள் எங்களுக்கு அளிக்கின்ற நிலை உள்ளது. சென்னை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் எப்படி நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார்கள், பிறகு மற்ற விவரங்களை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார்.

மேலும் படிக்க: விலைவாசி கிடுகிடு உயர்வு… ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2000 கூடுதல் செலவு ; தமிழக அரசுக்கு ராமதாஸ் கொடுத்த ஐடியா..!!!

ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் தோல்வியாக இந்த தேர்தலை சொல்லலாம். வாக்காளர்களின் எதிர்பார்ப்பின் பூர்த்தி செய்வது தான் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. 100 சதவீதம் வாக்குகளை பெறவேண்டும் என பல்வேறு முறை தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல் இந்த தேர்தல் பணிகள் நடைபெற்றன.

தேர்தல் முடிந்த பிறகு இயல்பாக தேர்தல் வாக்குப்பதிவு குறித்து அட்டவணை வெளியிடப்படும். கடந்த முறை 2-3 சதவீதம் தவறுதலாக வருவது இயல்பு. ஆனால், இந்த முறை 7-8 சதவீததம் தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளது, வாக்களிக்க முடியாதவர்கள் அவர்களது ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டது என்பதே உண்மையாகும்

மத சார்பு அரசியலை தவிர்க்க வேண்டும். வெறுப்பு அரசியல் இருக்க கூடாது. பிரதமராக இருக்கும் பொழுது அனைவருக்கும் அவர் பிரதமர். அப்படி இருக்கும் போது சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் வகையில் அவரது பேச்சு உள்ளது, அவர் பேசியது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று. சசிகலா அதிமுக சின்னத்தை வைத்து அளித்த கடிதம் வெத்து காகிதத்திற்கு சமம். சசிகலா, ஒபிஎஸ் யாரும் அரசியலில் இல்லை, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்கள் அரசியலை விட்டு வெளியேறுவது உறுதி, எனக் கூறினார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 273

    0

    0