50,000 இல்ல… வெறும் 820 தான்… கருணாநிதியை இதை விட பெரிதாக கேவலப்படுத்த முடியாது ; ஜெயக்குமார்விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan9 January 2024, 8:31 pm
கருணாநிதியை இதை விட பெரிதாக கேவலப்படுத்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- மக்களுக்கு பயன் தரும் வகையில் எம்ஜிஆர் பிறந்தநாள் கூட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுக அரசின் சாதனைகளை கூறும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெறும். மேலும், தற்போதைய ஆட்சியின் அவலங்களை எடுத்து கூற உள்ளோம்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, போக்குரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அதிமுக காரணம் என சொல்கின்றனர். முதலமைச்சர் தனது அப்பாவுக்கு சிலை வைக்கவும், பெயர் வைக்கவும், கார் ரேஸ் நடத்த கருவூலத்தில் பணம் இருக்கிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு கொடுக்க பணம் இல்லை. ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தின் கருவூலத்தில் இருந்து பணத்தை எடுத்தால் தமிழகத்தின் அனைத்து பிரச்சனையையும் தீர்த்து விடலாம்.
சுயநலம் கொண்ட அரசாக , தொழிலாளர் விரோதப் போக்குடன் இந்த அரசு உள்ளது. அரசு ஊதாறித் தனமாக செலவு செய்ததால் தொழிலாளர்களுக்கு கொடுக்க பணம் இல்லை. எல்லா பேருந்தும் எலும்பும் , தோலுமாக உள்ளது. எங்கள் ஆட்சி இருந்திருந்தால் அரசின் கருவூலத்திலிருந்து போக்குவரத்துத் கழகங்களுக்கு பணம் கொடுத்திருப்போம். பிடிவாதப் போக்கை அரசு கைவிட வேண்டும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வடிவமைப்பையே மாற்றி விட்டார்கள். எல்லா இடத்திலும் கருணாநிதி சிலையும், கருணாநிதி பெயரும் வைக்கப்படுகிறது. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் 899 நபர்கள்தான் பங்கேற்றனர். ஸ்டாலின் தனது தந்தையை கேவலப்படுத்தி விட்டார். கருணாநிதியை நல்லா வச்சு செஞ்ச தயாரிப்பாளர், நடிகர் சங்கங்களுக்கு எனது வாழ்த்துகள். கருணாநிதியால் உயர்ந்தவர் எம்ஜிஆர் என்பதை தமிழகம் ஏற்காது. கருணாநதிக்கு எம்ஜிஆர் போட்ட பிச்சைதான் முதலமைச்சர் பதவி. ரஜினி , கமலுக்கான எதிர்பார்ப்பு என்ன என்று தெரியவில்லை, என தெரிவித்துள்ளார்.
0
0