சென்னை : காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆரம்பித்த முதல்வரே, அதை அவமானம் படுத்தியுள்ளார் என்றும், பெயர் சூட்டுவதில் மட்டுமே திமுக அரசு பிரம்மாண்டம் காட்டுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்
முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருஉருவப்படத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :- நரிக்குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான். மீனவர்கள் இனத்தையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் திமுக அரசு இதுக்குறித்து எதையும் செய்யவில்லை.
அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்லும் திமுக அரசு, எதிர்க்கட்சிகளை முடக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், காலை சிற்றுண்டி திட்டம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- பெயர் சூட்டுவதில் மட்டுமே பிரம்மாண்டம் காட்டுகிறது திமுக அரசு என கூறிய அவர், காலை சிற்றுண்டித்திட்டத்தை ஆரம்பித்த முதல்வரே அதை அவமானம் படுத்தியுள்ளார் என்றும், திட்டத்தை தொடங்கி வைத்து அதில் கைகழுவுவது விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல் எனவும் கூறினார்.
திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை எதையுமே நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம்சாட்டிய அவர், பெண்களுக்கு உரிமைத்தொகை, நீட் தேர்வு மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் வாங்க திமுகவிற்கு வக்கு இல்லை எனவும் விமர்சனம் செய்தார்.
ஓ.பி.எஸ் – பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறிய அவர், ஜெயலலிதாவாக என்னை பார்கிறார்கள் என சசிகலா கூறியதற்கு, சசிகலா சிரிக்காமல் நிறைய ஜோக் சொல்லி வருகிறார் என்றும், அவருக்கு sense of humour அதிகம் எனவும் குறிப்பிட்டார்.
அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் இல்லாத நிலை நிலவி வருவதாக கூறிய அவர், அதிக அளவில் காய்ச்சல் பரவி வருவதாகவும், அதை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.