காலம் தாழ்த்தியே கபட நாடகம்… மருத்துவர்களை ஏமாற்ற நினைக்கும் திறனற்ற திமுக அரசு ; ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan20 December 2023, 6:23 pm
காலம் தாழ்த்தியே கபட நாடகம் ஆடி மருத்துவர்களை ஏமாற்ற நினைக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது ;- மாண்புமிகு அம்மாவின் அரசின் காலத்தில் மருத்துவத்துறை மகத்தான துறையாக விளங்கியது. நகர்ப்புறம் முதல் கிராமப்புறங்கள் வரை அம்மா மினிகிளினிக் திட்டம் மூலம் மக்கள் பயனடைந்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைத்ததால் மூடுவிழா செய்தது இந்த மக்கள் விரோத அரசு.. மாண்புமிகு அம்மா அரசின் கீழ் மக்கள் நலன் கருதி ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்றுத் தந்தார் நம் முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார்!
இன்று ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக்கல்லூரிகள் வரை மருத்துவர்கள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. மாண்புமிகு அம்மா அரசால் 8000 மருத்துவர்கள் ஏழு ஆண்டுகளில் நியமிக்கப்பட்டனர். பற்றாக்குறை பல்லாயிரம் இருந்தும் திமுக அரசு நியமித்த மருத்துவர்கள் எண்ணிக்கை என்ன?
உடனடியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த MRB Assistant surgeon General (மருத்துவர் )தேர்வு எழுதிய மருத்துவர்களுக்கு 1021 பணியிடங்கள் உடன் கூடுதலாக உள்ள 731 காலிப்பணியிடங்களையும் தேர்வின் முடிவின் அடிப்படையில் நிரப்ப வேண்டும், என தெரிவித்துள்ளார்.