வரம்பு மீறி பேசும் அமைச்சர்கள்… ஜெயலலிதா போல நடவடிக்கை எடுக்கத் தயங்கும் முதலமைச்சர் ஸ்டாலின் : ஜெயக்குமார் அட்டாக்!!

Author: Babu Lakshmanan
28 September 2022, 6:05 pm

சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல், சப்பைக்கட்டு கட்டுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சம்பந்தமில்லாமல் திமுக ஒழுங்கு நடவடிக்கைக்குட்பட்டு ஆளாக்கி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கேசி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பெயரை பயன்படுத்துவது, அதன் வண்ணத்தை பயன்படுத்துவது, இணையதளத்தில் பொதுமக்கள் மற்றவர்களிடத்தில் உறுப்பினர் சேர்க்கையில் போலியான அட்டைகள் வழங்குவது, பணத்தை வசூல் செய்வது போன்ற மோசடியான, ஏமாற்று வேலையை கேசி பழனிசாமி நடவடிக்கை உள்ளது.

இதன் காரணமாக, 2020 ஆம் ஆண்டு அவர் மீது சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுகவோடு கைகோர்த்துக்கொண்டு போலியாக அதிமுகவில் உறுப்பினரை சேர்த்து வசூல் செய்வது, அதிமுகவின் கொடியை வண்ணங்களை உபயோகித்ததும், இந்த செயலை முற்றிலுமாக இந்திய தண்டனைச் சட்டம், மத்திய குற்ற பிரிவில் கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

கேசி பழனிசாமி பொதுமக்களை ஏமாற்றிய செயலுக்காகவும், பொதுமக்களை ஏமாற்றியதால், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல பிரிவுகளில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

ஜாதி, மதம் இல்லாத அமைதி தவழுகின்ற மாநிலம் என்பது அம்மா அரசுடன், எடப்பாடி அவர்கள் அரசிலும் இருந்தது. அமைதி பூங்கா என்ற அளவிற்கு தமிழ்நாடு இருந்தது. ஆனால் இன்றைக்கு கோவை, மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி, சேலம் சென்னை அருகில் உள்ள இடங்களில் இப்படி வரிசையாக பெட்ரோல் குண்டு வீசுகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், பொதுவாக மத கலவரம் வராமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை,

அம்மா அவர்களின் ஆட்சியில் பாபர் மசூதி இடிப்பின் காலத்தில் கூட தமிழ்நாட்டில் கலவரம் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்த நாடு தமிழ்நாடு. இரும்பு கரம் கொண்டு இது போன்ற சமயங்களில் அடக்க வேண்டும். மதத்தின் பெயரால் கலவரம் செய்யும்பொழுது, ஆரம்ப காலத்திலே உடுக்கை நசுக்கி ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு பிரச்சினை உருவாகும் பொழுது, மக்களுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளிடம் இரும்பு கரம் காட்ட வேண்டும். ஆனால், அந்த இரும்புக்கரம் அதிமுக மீது காண்பிக்கிறது. ஆனால், அதை விட்டுவிட்டு தீவிரவாத அமைப்புகள் மீது கரும்பு கரம் காட்டுகிறது.

எங்கள் ஆட்சியில் ஊர்வலத்திற்கும் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் இந்த ஆட்சியில் பாம்புக்கும் வாலு, மீனுக்கும் தலையை காண்பிக்கும் ஆட்சியாக உள்ளது. இரட்டை வேடம் போடுவதால், அதிமுகவை பொருத்தவரை பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்வது. இதை பார்த்துக் கொள்வது காவல்துறை கையில் தான் உள்ளது.

பொன்முடி, துரைமுருகன், கேகேஎஸ்எஸ்ஆர், பெரிய கருப்பன், நேரு, அமைச்சர்களாக இருந்தாலும், இப்படி தான் இருக்கும். பெண்களுக்கு மதிப்பு கொடுக்காமல் பேசி வருவார்கள். இது போன்று ஒவ்வொரு அமைச்சரும் அதிகாரத்திற்கு ஏற்ப மற்ற சமுதாயத்தை நடந்து கொள்கிறார்கள்.

அம்மாவின் ஆட்சிக் காலத்தில் இது போல நடந்தால் அமைச்சர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி விடுவார். ஆனால் இப்பொழுது முதலமைச்சர் செப்பக்கட்டு கட்டுகிறார். தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு வழங்க முடியாத அரசு ஒரு திராவிட மாடல் அரசு. தலைவர்கள் தமிழக மக்களுக்காக வாழ்ந்து தொண்டாற்றி சென்ற தலைவர்கள் சிலையை உடைக்கிறார்கள் என்றால், அவர்களை குண்டர் சட்டத்தில் போட வேண்டும்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மழை நீர் வடிதல் கால்வாய்கள், நான்காவது தூண்டி சாலையில் மழைநீர்கள் தேங்கி நிற்கின்றது. இப்படி அடிப்படை கட்டமைப்பு வசதி இருக்கும் பொழுது, விளம்பர அரசியலுக்காக மட்டும் திமுக செயல் படுகிறது, எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 492

    0

    0