எங்களை விட்டது சனியன்… கொஞ்சம் கொஞ்சமாக கருப்பு பணத்தை வெளியே எடுக்கிறார் ஓபிஎஸ் : ஜெயக்குமார் காரசார பேச்சு!!

Author: Babu Lakshmanan
10 April 2023, 2:09 pm

சென்னை : திருச்சியில் நடத்தப்போகும் கூட்டத்தின் மூலம் கருப்பு பணத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளியே எடுப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஆளுநரை பொறுத்தவரை அரசியல் அமைப்பு சட்டத்தில் என்ன சொல்கிறதோ அதை பொறுத்து தான் இயங்க வேண்டும். திமுக அரசை பொறுத்தவரை இவர்கள் என்ன சொன்னாலும் ஆளுநர் சரி என்று சொன்னால் வாழ்க என்று சொல்வார்கள். எதிர்கட்சியாக திமுக இருக்கும் போது சட்டமன்றத்தில் சட்டை , பனியனை கிழித்து கொண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தானே போனாங்க.

ஓ.பி.எஸ். திருச்சியில் 24ம் தேதி கூட்டம் வைத்துள்ளார்கள். இதற்கு யாரை வேண்டும் என்றாலும் அழைத்து கொள்ளட்டும். எங்களுக்கு விட்டது சனியன்.
ஓ.பி.எஸ் கிட்ட இருக்கும் கருப்பு பணம் கூட்டம் மூலமாக வெளியே வரும்.
ஓ.பி.எஸ் கருப்பு பணம் 200, 300 ஆக மக்களுக்கு போகும்.

கலாஷேத்திரா கல்லூரி விவகாரத்தில் விசாரணை போகுது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் இல்லாத போது Go Back Modi. ஆட்சியில் இருக்கும் போது Come Back Modi என்று சொல்வார்கள், என தெரிவித்துள்ளார்.

பிரதமர் பாதுகாப்பில் ஏதோ குளறுபடி இருந்துச்சாம். இது உங்களுக்கு தெரியுமா என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், சட்டமன்றத்தில் பேச்சு உரிமை என்ற ஒன்றே இல்லை. எதிர்கட்சி துணை தலைவராக ஓ.பி.எஸ் நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது. இது குறித்து பல தடவை எடுத்து சொல்லியாச்சு. சட்டமன்ற உறுப்பினர்களை விட சபாநாயகர் தான் அதிகம் பேசுகிறார். உறுப்பினர்களை பேசவிடுவதில்லை, என தெரிவித்துள்ளார்.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…