பத்துக்கட்சி பண்ருட்டி.. சுயநலவாதி பன்னீர்செல்வம் ; பாஜகவுக்கு ஆதரவாக பேசியதால் கடுப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

Author: Babu Lakshmanan
29 September 2023, 10:34 am

பாஜகவுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த தேர்தல்களில் இருந்து வந்த அதிமுக – பாஜக கூட்டணி தற்போது முடிவுக்கு வந்து விட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதால், பாஜகவுடனான கூட்டணி முறித்துக் கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார்.இதனால், தமிழகத்தில் தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.

இந்தநிலையில், பாஜகவுடனான உறவு குறித்த நிலைப்பாடு பற்றி தெரிவிப்பதற்காக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ஜெயலலிதா பற்றி ஊழல் குற்றச்சாட்டை அண்ணாமலை சுமத்தினாரே என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “அது உண்மை. அவர் முதலமைச்சராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்கள் என்பது உண்மை. அது பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? என்பது வேறு. கடவுளையே குறை சொல்லும் நாடு. அவர் ஊழல் குற்றவாளி என்பதை நீங்கள் ஏற்கவில்லை, நாங்கள் ஏற்கவில்லை என்பது இல்லை. ஆனால், அது உண்மை. அந்த தீர்பை நாங்கள் ஏற்கவில்லை. அந்த தீர்ப்பு சரியாக வரவில்லை என்பது என் கருத்து,” என குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், “ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை மாற்றச் சொல்வதற்கு எடப்பாடி தரப்புக்கு என்ன அருகதை இருக்கிறது.. எடப்பாடி பழனிசாமியை மாற்றுங்கள்’ என பா.ஜ.க கூறினால், அ.தி.மு.க-வினர் ஏற்றுக்கொள்வார்களா?” என ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் இந்தப் பேச்சு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது :- பத்துக்கட்சி பண்ருட்டி அம்மா குறித்து அண்ணாமலை பேசிய கருத்தை ‘It is a fact’ என சொல்கிறார். அடுத்தவர் பேச அமைதி காத்தார். அருகில் இருப்பவரை பேசவும் அனுமதிக்கிறார் இந்த நடிப்பின் நாயகன். தாயை பழிப்பதை மகிழ்வோடு தாலாட்டு கேட்பதை போல கேட்கும் சுயநலவாதி பன்னீர்செல்வம், என தெரிவித்துள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 328

    0

    0