அன்று 2G…. இன்று G SQUARE… திமுகவுக்கு தேதி குறிச்சாச்சு ; ஆட்டத்தை ஆரம்பித்த மத்திய அரசு ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Author: Babu Lakshmanan
24 April 2023, 5:05 pm

ஏற்கனவே 2 ஜியால் ஆட்சி கவிழ்ந்த நிலையில், தற்போது ஜி ஸ்கொயரால் திமுக ஆட்சி வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கும் வகையில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தாத்தாவை மிஞ்சும் வகையில் 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நிதியமைச்சரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை உதயநிதி ஸ்டாலினையும், சபரிசனையும் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே 2 ஜியால் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது ஜி ஸ்கொயரால் திமுக ஆட்சி வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது. தற்போது, திமுகவிற்கு கவுண்டவுன் ஆரம்பித்துள்ளது.

தமிழகத்தில் நூதனமாக கொள்ளையடிக்கும் கும்பல் திமுக. நஷ்டத்தில் இயங்கி வந்த ஜி ஸ்கொயர் 2 ஆண்டுகளில் பல மடங்கு வளர்ந்தது எப்படி என்பது குறித்து மத்திய அரசு இன்று 50 இடங்களில் விசாரணை நடத்தி வருகிறது. இது மட்டுமில்லாமல் திமுக மீது மத்திய அரசின் நடவடிக்கை தொடர வேண்டும். பிடிஆரின் வாக்குமூலம் தொடர்பாக அதிமுக சார்பில் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். இது தொடர்பான பிரச்சனைகளை சும்மா விட மாட்டோம்.

தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்த உடன் டாஸ்மாக்கை மூடுவோம், மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுகவினர் தெரிவித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த உடன் செய்தார்களா? மதுபாட்டில்களை அதிகம் விற்பவர்களுக்கு சர்டிபிகேட்டும், விற்பனை செய்யாதவர்களுக்கு மெமோவும் அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலை தான் நிலவி வருகிறது.

டாஸ்மாக் பார் நடத்துபவர்கள் விற்பனையில் 1 சதவிகதம் அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த நிலையை 2.5 சதவிகதம் தர வேண்டும் என மாற்றி அது அரசுக்கு செல்லாமல் சாராய அமைச்சருக்கு செல்கிறது. இதன் மூலம் சாராய அமைச்சருக்கு மாதம் ரூ.40 கோடி செல்கிறது. தேர்தலுக்கு முன் டாஸ்மாக்கை மூடு என கோஷமிட்டு தற்போது தமிழகத்தை சாராய மாநிலமாக மாற்றியுள்ளது திமுக.

திருமண மண்டபத்தில் மது சப்ளை செய்வதால் கலாச்சாரம் சீரழியும். விளையாட்டு திடலில் எதற்காக சரக்கு விற்க வேண்டும். விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு பூஸ்ட் அப் அளிப்பதற்காக பீர் அடி சரக்கு அடி என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அங்கும் சரக்கு, இங்கும் சரக்கு, எங்கும் சரக்கு, எதிலும் சரக்கு என குடிப்பழக்கத்தை மக்களுக்கு பழக்கப்படுத்தும் வேலையை திமுக செய்து வருகிறது.

மீனவ மக்களை விடியா அரசு வஞ்சித்து வருகிறது. 12 மணிநேர வேலை மசோதா காரணமாக திமுக கூட்டணி கட்சியினரே வெளியேறியுள்ளனர். கார்ப்பரேட் கம்பெனிகளின் கொத்தடிமையாக இருப்பதை காட்டும் வகையில் சட்டப்பேரவை முடியும் நேரத்தில் 12 மணி நேர வேலை மசோதாவை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

திருமண மண்டபங்கள், விளையாட்டு திடலில் மது அளிப்பது அறிவிப்பு வெளியான உடன் எதிர்ப்புகள் கிளம்பியதால் அதனை தற்போது ரிவர்சாக மாற்றியுள்ளனர். அதிமுக ஆட்சியில் மதுக்கடைகளை குறைத்தோம். திமுக ஆட்சியில் திருமண மண்டபம், விளையாட்டு திடலை தொடர்ந்து வரும் காலங்களில் பள்ளி, கல்லூரிகளில் வேன் மூலமாக பீர் சப்ளை செய்யும் வேலையை திமுக செய்யும்.

சாந்தோம் அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் தனியார் மாலுக்காக தான் நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒரு தகவலும் உள்ளது. ஓபிஎஸ் உடன் இருப்பவர்கள் யாரும் ஆரம்ப காலத்தில் இருந்து கட்சியில் இருந்தவர்கள் இல்லை. அவருடன் இருப்பவர்கள் எல்லாம் வேறு கட்சிக்கு சென்று வந்தவர்களும், 420க்களும் தான் உள்ளனர்.

மே தினம் உழைப்பவர்களுக்கான சீதனம் ஆகும். உழைப்பாளர்களின் சீதனத்தை பறிக்கும் வகையில் மூதேவிகள் செயல்பட்டு வருகின்றன, என அவர் தெரிவித்தார்.

  • Dhanush accused of troubling Keerthy Suresh கீர்த்தி சுரேஷ்க்கு தொல்லை : தனுஷை எச்சரித்த ரஜினி..வெளிவந்த ரகசியம்..!
  • Views: - 368

    0

    0