கருணாநிதி சம்பாதிக்காததை உதயநிதி சம்பாதித்து விட்டார் … அமைச்சர்கள் அன்பில் மகேஷ் – TRB ராஜாவுக்கு தான் போட்டி ; ஜெயக்குமார் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
18 May 2023, 2:25 pm

சென்னை ; 30 ஆயிரம் கோடி ரூபாய் இரண்டு ஆண்டு காலத்தில் அவர் தாத்தா கருணாநிதி காலத்தில் கூட சம்பாதிக்காததை உதயநிதி சம்பாதித்து உள்ளதாகவும், அவருடன் இருந்தவர் போட்டு கொடுத்து இப்போது அதை பதுக்க இடம் தேடி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ள சாராயம் பருகி உயிரிழப்பு நிகழ்ந்தது தொடர்பாக அதிமுக சார்பில் வருகின்ற 22ம் தேதி பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளனர். அதனை தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் அனுமதி பெறுவதற்கு அதிமுகவின் சட்டத்துறை வல்லுனர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் ஆணையரகத்திற்கு நேரில் வந்து அவரை சந்தித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- வரும் 22ம் தேதி காலை 10:30 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக அதிமுக நிர்வாகிகள் சேர்ந்து கிண்டி சின்னமலை அருகில் பேரணியாக புறப்பட்டு ஆளுநருக்கு மனு அளிக்க உள்ளோம். விடியாத அரசு பொறுப்பேற்ற பின்னர் சட்ட ஒழுங்கு பிரச்சினை, எவருக்கும் பாதிப்பு இல்லாத நிலை உள்ளது, பல்வேறு முறைகேடுகள் உள்ளது.

30 ஆயிரம் கோடி ரூபாய் இரண்டு ஆண்டு காலத்தில் அவர் தாத்தா கருணாநிதி காலத்தில் கூட சம்பாதிக்காததை உதயநிதி சம்பாதித்து உள்ளார். அவருடன் இருந்தவர் போட்டு கொடுத்து இப்போது அதை பதுக்க இடம் தேடி வருகிறார்கள். அதிமுக எடுத்த தொடர் சட்ட நடவடிக்கை காரணமாக தான் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்து நிலை நிறுத்தியது.

ஜல்லிக் கட்டு நாயகன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் ஓபிஎஸ் யோசித்து பார்க்க வேண்டும். இது ஆயிரக்கணக்கான மக்கள் மெரினாவில் கூட அடைந்தது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் ஓபிஎஸ்க்கு வரலாற்றில் பெயர் இருக்க வேண்டும் என்ற ஆசையில் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினரை ஏவி விட்டு முழுமையாக தடியடி செய்தார்.

நடுக்குப்பம், நொச்சிக்குப்பம் மீனவர்கள் அதிகம் தடியடிக்கு ஆளாகினர். இவர் முதலமைச்சராக இருந்த போது குடியரசு விழா நடக்க வேண்டும் என்று தடியடி நடத்தினார்கள். இவர் ஜல்லிக்கட்டு நாயகனா..? உண்மையை மறைக்க தனக்கு தானே ஜல்லிக் கட்டு நாயகன் என்று சொல்லிக் கொள்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை , தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கட்ட பஞ்சாயத்து, கொலை, கொள்ளை நடக்கிறது. காரில் வந்து இப்போது நகை பறிக்கிறார்கள், அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லை. சட்ட ஒழுங்கு இந்தியாவில் மிக மோசமான மாநிலம் தமிழ்நாடு இருப்பது தற்போதைய சூழ்நிலை, அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது. பால், கேஸ் என அனைத்தும் விலை ஏற்றம், நேரடி பாதிப்பு. அம்மாவின் திட்டம் மக்களுக்கு பயன்படும் திட்டம். கடலில் பேனா வைப்பது போன்ற ஊதாரி திட்டம் இல்லை.

14 ஆயிரம் குடும்பம் எங்கள் ஆட்சியில் பயன் பெற்று உள்ளது. 7 ஆயிரம் கோடி செலவு செய்து உள்ளோம். மடிக்கணினி கொடுத்தார்கள். தொலை நோக்கு பார்வையோடு, இப்போது அது கொடுக்கவில்லை. ஒரு நாளைக்கு 20 ரூபாயில் சாப்பிடலாம். அம்மா உணவகத்தில் முறையாக எண்ணெய் எல்லாம் கொடுக்காமல் எப்படி சிறப்பாக அம்மா உணவகம் செயல்படும்.

ஊராட்சி தலைவர்களுக்கு கொத்தடிமைகளாக ஊராட்சி செயலாளர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது இந்த அரசு , மருத்துவர்கள், ஆசிரியர்கள் என போராடி வருகின்றனர். பணத்தை வாரி வாரி இரைத்தாலும் அம்மாவாசை தான் திமுகவுக்கு.
ஏற்கனவே ஒரு மாற்றுத் திறனாளி கோப்பை வாங்கி தந்தையையும், மகனையும் ஏமாற்றி இருக்கிறார் என்ன என்று விசாரிக்க வேண்டும்.

எதிர்பாராத விபத்து நடந்தால் மின் கசிவு, யானை தாக்கினால் 10 லட்சம் கொடுங்கள். இதற்கு மட்டும் ஏன் கொடுக்கிறார்கள். மறைக்க பார்க்கிறார்கள். முதலமைச்சர் கள்ள சாராயம் குடித்தவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்ததை வைத்து சமூக வலைதளங்களில் இந்த ஆட்சியை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். ஆரம்பத்திலேயே திமுகவில் இருந்த சாராயம் விற்றவர்களை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று இத்தனை பேர் இறந்து இருக்க மாட்டார்கள். ஏன் கொள்கை விளக்க குறிப்பில் கள்ளசாராயம் குறித்து எடுத்த நடவடிக்கை குறித்து ஏன் தெரிவிக்கவில்லை.

உண்மையில் செந்தில் பாலாஜி நிதானத்தில் தான் பேசுகிறாரா என்று ப்ரீத் அனாலைசர் வைத்து பரிசோதிக்க வேண்டும். சாராயம் குடிப்பவர்களுக்கு சானிடைசர் குடிப்பவருக்கும் வித்தியாசம் இல்லையா? சிபிசிஐடி மாநில அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. துறைக்கு பின்னால் இருப்பவர்களை பிடிக்க சிபிஐக்கு வழக்கை மாற்றுங்கள். ஆளுங்கட்சிக்கு சட்டம் இல்லை. எதிர் கட்சியில் தப்பு செய்யவில்லை என்றாலும் பொய் வழக்கு போட்டு நடவடிக்கை எடுப்பார்கள்.

இனிமேலாவது யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள். உதயநிதிக்கு அன்பில் போன்று புதிய அமைச்சர் ராஜாவும் ஒரு ரசிகர் மன்ற தலைவர் தான் இப்போது இவர்களுக்கு இடையில் போட்டி. நாசருக்கு பால் ஊற்றிவிட்டார்கள், வேறு முஸ்லிம் ஒருவருக்கு பதவி அளித்து இருக்கலாம், எனக் கூறினார்.

  • Ajith screamed after Vijay's dialogue.. INTERVAL scene from GOOD BAD UGLY leaked விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!