PTR சொன்ன 30 ஆயிரம் கோடி சொத்து… அமைச்சர் உதயநிதியை கஸ்ட்டடியில் எடுத்து விசாரிக்கனும்.. கொளுத்திப் போட்ட ஜெயக்குமார்..!!!

Author: Babu Lakshmanan
21 April 2023, 1:26 pm

உதயநிதியும், சபரீசனும் குறைந்த நாட்களில் பல 100 கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளது குறித்து உரிய விசாரணை நடத்தி விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் நீர் மோர் பந்தலை அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட குளுருச்சி தரும் பழவகைகளை கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :- தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலப் பணிகளை அதிமுக செய்து வருகிறது. பொய் ஒன்றே மூலதனமாக வைத்து ஆட்சி நடத்திவருகிறது திமுக அரசு.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சேமித்த சொத்துக்களை விட, உதயநிதியும், சபரீசனும் ஒரே ஆண்டில் பல 100 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளது குறித்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்து கஸ்ட்டடி எடுத்து விசாரிக்க வேண்டும். இது மத்திய அரசின் பொறுப்பு.

திமுகவினரின் சொத்து குவிப்பு விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கையை அதிமுக எடுக்கும். பன்னீர்செல்வம் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர், டிடிவி, சசிகலா உள்ளிட்டவர்களை தவிற மற்ற யார் அதிமுகவுக்கு வந்தாலும் வரவேற்போம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் சர்வசாதரனமாக நடக்கிறது. காவல்துறை சுதந்திரமாக இல்லை.

தமிழகத்தில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியாமல் முடங்கிபோய் உள்ளது. காவல்துறை அதிகாரிகள் திமுகவினரால் மிரட்டப்பட்டு வருவதால், காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாமல் உள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் கஞ்சா அதிகம் கிடைப்பது தமிழகத்தில் தான், என்றும் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!