எம்ஜிஆர், ஜெயலலிதா நினைத்ததை எடப்பாடி பழனிசாமி செய்து காட்டுவார் : இதுதான் உண்மையான தர்மயுத்தம்… கேபி முனுசாமி அதிரடி

Author: Babu Lakshmanan
23 பிப்ரவரி 2023, 4:27 மணி
Quick Share

அதிமுக குறித்து விமர்சனம் செய்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சம்மட்டி அடியாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்..

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக தேர்தல் பணிமனையில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,முனுசாமி, கே.ஏ. செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, முன்னாள் அமைச்சர் K.P.முனுசாமி பேசியதாவது :- காலை உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது . அதிமுக என்ற ஒரு மாபெரும் இயக்கம் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் நீண்ட காலம் காப்பாற்றப்பட்டு, 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து மாபெரும் இயக்கத்திற்கு சோதனை வந்தது.

அந்த காலகட்டத்தில் இயக்கத்தை அழிப்பவர்களுக்கும், இயக்கத்தை முடக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி சட்டத்தின் வழியாக மிகப்பெரிய வெற்றி தேடி தந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் சார்பாக வாழ்த்துக்கள். மேலும், கழகத்தின் வழக்கறிஞர் பிரிவுக்கும் வாழ்த்துக்கள்.

தர்மம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. சிலர் தர்ம போராட்டத்தை உருவாக்கி கொண்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையான தர்மத்திற்காக போராடியவர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக உருவாக்கிய எம்ஜிஆர் மக்களுக்காக என்ன செய்ய நினைத்தாரோ, ஜெயலலிதா என்ன செய்தாரோ, அதை முழுமையாக மக்களுக்கு சிறப்பாக எடப்பாடி பழனிசாமி செய்வார், எனக் கூறினார்.

ஓபிஎஸ் மனம் திரும்பி வந்தால் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கியதை , உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் உச்சநீதிமன்றமே கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் என கூறுகிறது என்ல், அதிமுகவை எதிர்த்து எவ்வளவு தூரம் செயல்பட்டுள்ளார் என்பது புரிந்து கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் எதிரொலிக்கும். அதிமுக அழிக்கப்பட வேண்டும் , இத்தோடு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் என பல அரசியல் விமர்சகர்கள் கூட கருத்து தெரிவித்து வந்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை கண்ணுக்கெட்டிய தூரம் வரை இந்த கட்சி எங்கு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்கெல்லாம் செம்மட்டி அடிப்பதாக இந்த தீர்ப்பு வந்துள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் . பொதுச் செயலாளர் தேர்தல் ஒரு கட்சி நடவடிக்கை. பொதுச் செயலாளர் அவர்கள் தலைமை கழகத்தோடு இணைந்து கட்சி நடவடிக்கை முன்னெடுத்துச் செல்வார். அதன் அடிப்படையில் பொதுச் செயலாளர் தேர்வு விரைவில் நடைபெறும், எனக் கூறினார்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 510

    0

    0