தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவை உச்சநீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் பொன்முடி பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, கடந்த 2002ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என அறிவித்தது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த தீர்ப்பின் மூலம் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை உடனடியாக இழந்தார் பொன்முடி.
அதோடு, மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கும் விதமாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டது. எனவே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை பொன்முடியும், அவரது மனைவியும் சிறைக்கு செல்ல மாட்டார்கள் என்று சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக, தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவை உச்சநீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் பொன்முடி பெற வேண்டும் என்றும், தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பெறாவிட்டால் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 30 நாட்களுக்குள் தடை உத்தரவை பெறாவிட்டால், விசாரணை நீதிமன்றம் வாரண்ட் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
This website uses cookies.