மகளிர் ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தில் திமுக அரசு குளறுபடி… முதலமைச்சருக்கு தெரிந்து தான் நடக்குமா..? ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan21 July 2023, 3:38 pm
மகளிர் 1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தில் திமுக அரசு கடும் குளறுபடியால் மக்கள் வேதனையில் கண்ணீர் வடிப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- தமிழக அரசு ஒரு கோடி பேருக்கு 1000 ரூபாயை பெண்களுக்கு உரிமை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்து 7,000 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்குவோம் என வாக்குறுதியை வேதவாக வாக்காக நம்பி இன்றைக்கு மக்கள் நடு தெருவில் உள்ளார்கள்.தற்போது தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த குடும்ப அட்டைகளில் உள்ள பெண்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
ஆனால் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் வழங்கும் என்ற குழப்பத்தை முதலில் ஏற்படுத்தினர். தற்போது மேலும் பல நிபந்தங்களை விதித்துள்ளனர். இதில் 2 கோடி 24 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு வீடு தோறும் விண்ணப்பம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு இதில் மின்சார கட்டணம் தகுதி, வருவாய் விவரம்,சொத்து விபரம் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விண்ணப்பத்தை கொடுத்து விட்டு, தற்போது தகுதி உள்ளவர்கள் என கூறுவது ஒரு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கோடி பேருக்கு வழங்குவோம் என்று அறிவித்துவிட்டு, 2 கோடி 24 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பம் வழங்கி,தற்போது பல நிபந்தனைகளை விதித்து இருப்பது புரிதல் இல்லாமல் உள்ளது.
முதலில் அனைவருக்கும் வழங்குவோம் என முதலில் அறிவித்துவிட்டு, அதனை தொடர்ந்து தகுதி உள்ளவர்களுக்கு வழங்குவோம் என்று அறிவித்துவிட்டு, தற்போது பல நிபந்தங்களை விதித்து 3 வது அத்தியாயத்தை ஏற்படுத்தி குழப்பத்தின் மொத்த வடிவமாக உள்ளது. இதனால் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.இதே திமுக கட்சியின் கூட்டணி சேர்ந்த காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் 2000 ரூபாய் உரிமைதொகையை மகளிர்க்கு வழங்கி உள்ளது
மகளிர் உரிமைதொகை குளறுபடி செயல்பாடு முதலமைச்சருக்கு தெரிந்து நடக்கிறதா ? இல்லை தெரிந்து கொள்ள ஆர்வமாக இல்லையா? மகளிர் உரிமைத் திட்டத்தில் அனைவருக்கும் வழங்க வேண்டும் எடப்பாடியார் விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு அந்த உரிமை உள்ளது ஏனென்றால் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு உள்ளிட்ட பொருட்களை வழங்கி கடைக்கோடி மக்களுக்கும் திட்டங்களை எந்த பாகுபாடும் இன்றி வழங்கினார்.
அதேபோல் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் 32 லட்சம் பேர் வழங்கப்பட்டு, அதனை தொடர்ந்து கூடுதலாக 5 லட்சம் நபர்களுக்கு எடப்பாடியார் வழங்கினார். இந்த திட்டத்தில் ஒன்பது பிரிவுகள் உள்ளது .திமுக தேர்தல் அறிக்கை 330 யில், 1000 ரூபாய் உதவித்தொகையை 1,500 உயர்த்தி வாங்கப்படும் கூறினார்கள் இதுவரை வழங்கவில்லை தற்போது படிப்படியாக நிறுத்திவிட்டு குளறுபடி ஏற்படுத்தி வருகிறார்கள், என கூறினார்.