தேவரின் புகழை கூண்டுக்குள் அடைக்க முயற்சி.. இபிஎஸை இழிவுபடுத்த நினைத்தவர்களை தேவர் நிச்சயமாக தண்டிப்பார் ; ஆர்பி உதயகுமார்..!!

Author: Babu Lakshmanan
1 November 2023, 11:17 am

எல்லோரையும் வாழ வைப்பவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றும், ஆனால் தேவரின் முகக்கவசத்தை அணிந்து கொண்டு பிறரை (EPSஐ) இழிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தால் பசும்பொன்னில் இருக்கக்கூடிய அந்த தேவர் நிச்சயமாக அவர்களை தண்டிப்பார் என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவருடைய குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் மாலை அணிவித்து பால்குடம் எடுத்து வந்து மலர் தூவி மரியாதை செய்து வந்த நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகை தந்து, மதுரையில் இருக்கக்கூடிய மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு, அதிமுக உடைய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சாலை மார்க்கமாக பசும்பொன் சென்றார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவருடைய நினைவிடத்தில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நிலையில், இன்று மதுரை அண்ணாநகர் பகுதியில் இருக்கக்கூடிய தனது அலுவலகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :- தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கொண்டிருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை விழாவில் வரலாறு காணாத வரவேற்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த தேவர் திருத்தொண்டர்களும் குறிப்பாக வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் வழித்தோன்றலாக இருக்கக்கூடிய மகளிர் வரவேற்பு அளித்த அந்த காட்சியை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத விஷமிகள், ஏதோ தெய்வத்திருமகனார் தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்கிறார்கள்.

அந்த சுயநல கயவர்களிடமிருந்து தெய்வத்திருமகனார் ஒரு தேசிய தலைவர், ஒரு சுதந்திரப் போராட்டத் தலைவர், சர்வ ஜாதிகளுக்கும், சர்வ மதத்திற்கும், அனைத்து பிரிவினருக்கும், அனைவருக்கும் சொந்தமானவர் என்பதை நிரூபித்து காட்டுகின்ற வகையில், வெற்றி திருமகனாரை அந்த பசும்பொன் பூமியில் அஞ்சாத நெஞ்சு உறுதியோடு நேரிலே வந்திருந்து உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்று சொல்லி உண்மையான தேவர் திருத்தொண்டார்கள், முத்துராமலிங்கத் தேவரின் வழித்தோன்றல்கள், அந்த மண்ணிலே பிறந்தவர்கள், அவரது புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று அனைவருமே கைகூப்பி வணங்கி வாழ்த்து சொல்லி வரவேற்ற காட்சியை எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறது.

மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த வரவேற்பு தெய்வத்திருமகனாருடைய ஆசி ஈபிஎஸ் அவர்களுக்கு இருக்கிறது என்பதுதான் இது எடுத்துக்காட்டுகிறது
சில விஷமிகள், சில கயவர்கள் ஏன் கடந்தாண்டு வரவில்லை என்று சொல்கிறார்கள்.

கரு மேனியாக இருந்த தேவருக்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 13 கிலோ அளவில் தங்க கவசம் கொடுத்ததை நீதிமன்றம் வரை சென்று சர்ச்சையாகிய நிலையில், தங்க கவசத்தை எடுத்துக் கொடுப்பதற்கு சில விஷமிகளால் தடை ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தேவரின் ஆசியோடு இபிஎஸ் அவர்கள் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய நிலையில், அதிமுகவின் பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், அதைப் பெற்று தேவர் நினைவாலய டிரஸ்டியாக இருக்கக்கூடிய காந்திமீனால் அவர்களிடத்தில் ஒப்படைத்தார்.

தேவருக்கு தங்கக் கவசம் அனுவிக்கப்பட்ட அந்த வரலாற்றை உருவாக்கிய பெருமை EPSக்கு உண்டு. கடந்த
ஆண்டுகளிலே ஏன் வரவில்லை என்பதற்கு கேள்வியாக வைத்து சொல்லப்பட்டு வந்தாலும்?.?.?. அதற்காக பல்வேறு அரசியல் காரணங்கள் சொல்லப்பட்டதும் உண்மையிலேயே ஒரு பொய் பிரச்சாரம். நான்கு முறை முதல்வராக இருந்த போதும் இபிஎஸ் அவர்கள் தான் முதலில் அஞ்சலி செலுத்தினார்.

மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய விழாவில் முதல் நாள் ஆன்மீக விழா, இரண்டாவது நாள் அரசியல் விழா, மூன்றாவது நாள் அரசு விழாவாக 28 ,29, 30 ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்களில் 30ஆம் தேதி நடைபெறுகின்ற விழாவிலே முதல் நபராக ஈபிஎஸ் அவர்கள் முதலமைச்சராக இருந்து மரியாதை செலுத்திய வரலாற்றையும் சில விஷயங்கள் திட்டம் திட்டி மறைக்கிறார்கள்.

ஏறத்தாழ மதுரையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அவர் செல்கின்ற பாதை எல்லாம் பொதுமக்கள் அவருக்கு அதிமுகவின் வாரிசாக இருக்கின்ற அவருக்கு பசும்பொன் நோக்கி அவர் செல்லும் போது வரவேற்ற காட்சியை ஏராளம் தாராளம். திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கயவர்களால் விஷமிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிலரால் வாங்கிய கூலிக்கு கூவியவர்கள், தோல்வியற்றவர்கள் என்பதுதான் நேற்றைய நிலை, தேவரின் அருள் ஆசி நிறைந்திருக்கிறது முழுமையாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு தான், பொதுமக்களுடைய பிரம்மாண்ட வரவேற்பில் அவர் பசும்பொன் சென்றது.

புண்ணிய பூமி ஆன பசும்பொன்னுக்கு நேரிலே சென்று அந்த புண்ணிய பூமியில் தேவர் அவர்களின் திருக்கோவிலில் ஏழாம் படைவீடாக இருக்கக்கூடிய அந்த இடத்திற்கு சென்று தேவரின் ஆசி பெற்று பத்திரிக்கையாளர்களே சந்தித்து தேவரின் புகழை அந்த ஜெயந்தி விழாவின்போது, அரசு விழாவாக அதிமுக ஆட்சி கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் தான் அறிவித்தார்கள் என்று கூறினார்.

அதேபோன்று, சட்டப்பேரவையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், தேவர் அவர்களுடைய புகைப்படம் இடம் பெற வேண்டும் என்கின்ற அரசாணையையும் பிறப்பித்தவர் எம்ஜிஆர் தான், அவர்கள் வழியாக வந்த ஜெயலலிதா அவர்கள் நந்தனத்தில் வானுயர தேவரின் புகழ் அனைவருக்கும் தெரியும் வண்ணம் வெண்கலத்தால் ஆன திருவுருவ சிலையை அமைத்துக் கொடுத்தார்கள்.

தேவர் அவர்களுடைய புகழை ஓங்கி எடுத்துச் செல்வதில் வானுயர்ந்து எடுத்துச் செல்வதில் உலகெங்கும் எடுத்துச் செல்வதில் அதிமுக முன்னேற்றக் கழகம் தான். இந்த தேவர் திருமகனுடைய குருபூஜை ஜெயந்தி விழாவில் நேரிலே வந்து அஞ்சலி செலுத்தியதும், எல்லோரும் மணமகிழ்ந்து வாழ்த்தும் வரவேற்பும் அவருக்கு கொடுத்தார்கள்.

தென்னாட்டு நேதாஜி என்று அழைக்கப்படுகின்ற தேவர் அவர்கள் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு சுதந்திரப் போராட்டத்திற்கு ஆட்கள் தேவைப்படுகின்ற காலகட்டத்தில் அணி அணியாக இங்கிருந்து அனுப்பியவர். தென் தமிழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்று பெயர் வைக்கக்கூடிய காரணம் என்னவென்றால், அது தேவர் அவர்களுடைய வழிகாட்டுதல்தான் காரணம்.

என்னுடைய தந்தையார் பெயர் கூட போஸ் என்பதை சொல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய 50 ஆண்டுகால வாழ்க்கையில் எல்லோரையும் வரவேற்க கூடிய ஒரு புண்ணிய பூமியாகத்தான் பசும்பொன் இருந்து வருகிறது. சமீப காலமாக சில கயவர்கள், சுயநலவாதிகள், கையாளாகாதவர்கள் அரசியலில் தோல்வியுற்றவர்கள், அரசியலிலே முகவரி இழந்தவர்கள் அரசியலிலே காணாமல் போனவர்கள்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுடைய கவசத்தை முகமூடியாக அணிந்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பை தேடுவது ஒன்றும் குற்றமல்ல. அவர் எல்லோரையும் வாழ வைப்பார். ஆனால் அந்த முகக்கவசத்தை அணிந்து கொண்டு பிறரை இழிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தால், சிலரை நீங்கள் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அவதூறு பரப்ப வேண்டும் என்று நினைத்தால், நான் உறுதியாக சொல்கின்றேன், நான் கண்ட அனுபவத்தில் சொல்கின்றேன், நான் நேரிலே உணர்ந்த அந்த வரலாற்றிலே சொல்கிறேன், புண்ணிய பூமி ஆக இருக்கக்கூடிய அந்த பசும்பொன்னில் இருக்கக்கூடிய அந்த தேவர் நிச்சயமாக அவர்களை தண்டிப்பார்.

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆலய பிரவேசத்தை முன்னின்று நடத்தியவர் தேவர். இஸ்லாமிய தாயிடம் இருந்து தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர் தேவர். தேவர் சிலருக்கு மட்டுமே சொந்தம் என்பதை குறுகிய வட்டத்திற்குள் தேவருடைய புகழை கூண்டுக்குள் அடைக்க நினைக்கின்றார்கள்.
அந்த கூண்டையெல்லாம் தகர்த்தெறிந்து தேவர் அவர்களுடைய புகழ், அவருடைய தியாக வரலாறு, அவர் சர்வ மதத்திற்கும் பாடுபட்டவர் சர்வ சமயத்திற்கும் பாடுபட்டவர், சர்வ ஜாதிகளுக்கும் பாடுபட்டவர் என்பதை எல்லாம் இன்று உலகறிய செய்திருக்கிறோம்.

அங்கொன்றும், இங்கொன்றுமாக ஏற்பாடு செய்யப்பட்டு திட்டமிட்டு கயவர்கள் செய்ததை தோல்வியடை செய்து, இதோ தேவரை நான் காண வருகிறேன். அவர் ஆசி பெற வருகிறேன் என்று சொல்லி தேவருடைய ஆசியைப் பெற்று இருக்கின்ற எடப்பாடியார் அவர்களுக்கு, நீங்கள் ஏற்படுத்துகின்ற இந்த சலசலப்பும், இந்த குள்ளநரி கூட்டத்தினருடைய சலசலப்பும், சுயநலவாதிகள் உடைய சலசலப்பு, தேவரின் வழித்தோன்றலுக்கும், ரத்தத்தின் ரத்தங்களுக்கும் வேலுமங்கை வீரனாச்சியாருடைய வழித்தோன்றலாக இருக்கக்கூடிய புறநானூற்று தாய்மார்களுக்கும் எந்தவிதமான சலசலப்பும் ஏற்படுத்த முடியாது என்பதை நேற்றைய தினம் இங்கே நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

இன்று பல்வேறு காரணங்களை சொல்கின்றார்கள், இட ஒதுக்கீட்டைப் பற்றி கூட சிலர் தன் சுயநலத்திற்காக சொல்கிறார்கள், இட ஒதுக்கீடு போராட்டம் இன்று தொடங்கியது அல்ல, நாடு வெள்ளையர்கள் ஆளுமையில் இருந்த 1840 காலகட்டத்திலே அரசு பதவிகளிலே பெரும்பான்மையாக இருப்பவர்கள், பெருவாரியான பதவிகளில் இருக்கிறார்கள்.

ஆகவே அறிவு சார்ந்த சமூகமான தங்களுக்கு அரசு பதவிகளிலே உரிய பதவி வழங்கிட வேண்டும் என்று
முதல் முதலில் குரல் கொடுத்தவர்கள் யார் என்று பார்த்தால் பொற்கொல்லர் சமூகம் -ஆச்சாரியார் சமூகம்.
முதன்முதலில் குரல் கொடுத்த போது, இது என்ன புது வகையான கோரிக்கையாக இருக்கிறது என்று அன்றைய ஆங்கிலேய அரசு ஆச்சரியத்தோடு பார்த்தது.

1845 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போராட்டம், 1871 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டம் அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழியாக உலகிலே எங்கும் காணப்படாத அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பிலேயே குலப் பிரிவுகள் ஜாதிப் பிரிவுகள் இந்தியாவில் பரவிக் கிடக்கும் சூழலிலே குடிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை என வலியுறுத்தப்பட்டது.

1881 ல் 2ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது குடிவாரி மக்கள் தொகையை கணக்கெடுப்பு முதன் முதலாக பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே இது சாத்தியம் செய்யப்பட்டிருக்கிறது, வலியுறுத்தப்பட்டிருக்கிறது, பதிவும் செய்யப்பட்டு இருக்கிறது என்பதுதான் உண்மை.
1921 ல் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, கல்வி, வேலைவாய்ப்பில் சமூக அடிப்படையில் வகுப்பு வாரி இட பங்கிட்டு கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தை தான் 1926 இல் சுப்பராயன் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்ற காலத்தில் அரசாணை
பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜாதி வாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் ஆங்கிலேய காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை அந்த கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

பசும்பொன் தேவருடைய திருஉருவ சிலைக்கு தென் தமிழகத்தில் குறிப்பாக கோரிப்பாளையத்தில் இருந்து பெருங்குடி விமான நிலையம், திருமங்கலம், உசிலம்பட்டி, செக்கானூரணி என தென்தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய தேவர் அவருடைய சிலைக்கு, ஒரு முதல்வராக நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பெருமை எடப்பாடியார் அவர்களுக்கு தான் உண்டு

நான்கு முறை முதலமைச்சராக அவர் இருந்து வந்த நிலையில், பசும்பொன்னில் நேரில் வந்து அஞ்சலி செய்த வரலாறு அவருக்கு இருந்து வருகிறது. அந்த வரலாற்றை சில சுயநலவாதிகள் தேவருடைய புகழை ஒரு கூண்டுக்குள் அடைக்க நினைத்ததை தகர்த்தெறிந்து உடைத்தெறிந்து, தேவர் அனைவருக்கும் சொந்தம் அவர் எல்லோருக்கும் ரத்த சொந்தம் அவர் எல்லோருக்கும் பொதுவானவர், அவர் ஒரு தேசிய தலைவர், அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்று நிரூபித்து காட்டி இருக்கின்ற தேவர் அவர்களுடைய புண்ணிய பூமியில் வருகை தந்து வெற்றிவாகை சூடி, வெற்றி கொடி பறக்கவிட்டு தேவருடைய வரலாற்றை, புகழை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்று இருக்கக்கூடிய இந்திய அரசியலில் கிங் மேக்கராக இருக்கக்கூடிய ஈபிஎஸ் அவர்களுடைய வருகை தென்னாட்டு மக்களிடத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சுயநலவாதிகளுடைய திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முயற்சிகள் தோல்வியுற்றது என்பதை
இந்த மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். தேவரின் வழித்தோன்றல்கள் இந்த சதியை முறியடித்து பசும்பொன் புண்ணிய பூமிக்கு ஈபிஎஸ் அவர்களை அழைத்துச் சென்று தேவருடைய ஆசி பெற்று வீரத்திருமகனாக இன்றைக்கு அவரை வழியனுப்பு வைத்திருக்கிறார்கள்.

இந்த வரலாறு தென்னாட்டு மக்களிடத்திலே எடுத்துச் செல்வதை கயவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவதூறை பரப்பி வருகிறார்கள். இந்த வரலாறு தென்னாட்டு மக்களிடத்திலே எடுத்துச் செல்வதை கயவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவதூறை பரப்பி வருகிறார்கள்.அவதூறுகளையும் இல்லாத செய்திகளை இட்டுக்கட்டும் பேசுகிறார்கள்.

இல்லாத செய்திகளை இட்டுக்கட்டி பேசி வருபவர்களுக்கு மத்தியில் பசும்பொன்னுக்கு எல்லோரும் வரலாம் என்பதை நிரூபித்து காட்டி, தேவருடைய புண்ணிய பூமிக்கு வருகை தந்த இபிஎஸ் அவர்களுக்கு
கோடான கோடி நன்றி. இந்த மண்ணிலே பிறந்து வளர்ந்து 50 ஆண்டு காலம் இந்த மண்ணிலே இருக்கக்கூடிய எங்களைப் போன்ற தேவர் திருமகனார் உடைய மண்ணிலே பிறந்தவர்கள் என்ற அந்த புண்ணியத்தோடும், தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுடைய புண்ணிய பூமிக்கு வருகை தந்ததற்கு ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, நீங்கள் படைத்திருப்பது சாதனை, வரலாறு, ஒரு புதிய வெற்றி, வரலாறு.

ஆகவே சுயநலவாதிகள் அரசியலிலே அடையாளம் தெரியாதவர்கள், மக்கள் செல்வாக்கை இழந்தவர்கள், மக்களின் அங்கீகாரத்தை இழந்தவர்கள், தேவருடைய முக கவசத்தை அணிந்து கொண்டு அவரது புகழை வட்டத்துக்குள் கூண்டுக்குள் அடைக்க நினைத்தவர்களை, புயலாய் புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதை தகர்த்தெறிந்து சாதனை படைத்திருக்கிறீர்கள்.

உங்கள் சாதனை வரலாற்றிலே பேசப்படும் பொன்னெழுத்துக்களால் எழுதப்படும். உங்களுடைய புகழை எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வோம். அந்த மண்ணிலே பிறந்தவன், அந்த மண்ணுக்கு சொந்தக்காரன், அந்த அந்த புண்ணிய பூமியில் எனக்கும் பங்கு உண்டு. நானும், அதன் சொந்தக்காரன் என்கின்ற அடிப்படையில் உங்களை வணங்கி விடைபெறுகிறேன், என்றார்

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 448

    0

    0