EPS-ஐ பார்த்து கத்துக்கோங்க.. இது கசப்பான மருந்து.. திமுகவுக்கு பூஜ்யம் மதிப்பெண் தான் ; ஆர்பி உதயகுமார்!!
Author: Babu Lakshmanan4 May 2024, 11:56 am
19 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறைக்காக 150 கோடி ஒதுக்கியுள்ளது யானை பசிக்கு சோளப்பொறியாக உள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- அக்னி நட்சத்திரத்தால் இன்றைக்கு 110 பாரன்ஹீட் மேல் வீசுவதால் தற்போது வெப்ப அலை தமிழக முழுவதும் வீசிக் கொண்டு இருக்கின்றது. இதனால் தமிழகத்தின் பல இடங்களிலே குடிநீர் பிரச்சனை தலை தூக்கி, தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.
தண்ணீர் மேலாண்மையிலே இந்த அரசு கையாண்ட விதத்தினாலே, வடகிழக்கு பருவமழை நமக்கு கிடைத்த மழை நீரை, முறையாக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி நிலத்தடி நீரை உயர்த்தி, குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் இவைகள் எல்லாம் நீர் சேமிப்பு நிலையங்களாக உருவாக்காமல் கைவிட்டதன் காரணமாக, இன்றைக்கு ஆறுகள், நீர் தேக்கங்கள் எல்லாம் தண்ணீர் வறண்டு காட்சியளிப்பது வேதனை அளிக்கிறது.
மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!
முல்லைப் பெரியாறில் 115 அடியாக நீர்மட்டம் உள்ளது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை,தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியார் உள்ளது. தற்போது அணையில் போதுமான நீர் உள்ளதாகவும், தேவைக்கேற்ப திறக்கப்படும் என்றும் நீர்நிலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள் ஆனால் உண்மையான கள நிலவரம் அவ்வாறு இல்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், பல கிராமங்களில் வார ஒருமுறை குடிநீர் இணைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் இன்றைக்கு தொடர்ந்து கவலை அடைந்து இருக்கிறார்கள். தென் மாவட்டங்களான திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான குடிநீர் ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணை,அதன் உயரம் 143 அடி கொண்டது இந்த அணை நீர்மட்டம் 57 அடியாக உள்ளது.
அதேபோல 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை 88.70 அடியாக குறைந்து வறண்டு காணப்படுகிறது. அதேபோன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடனாநிதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறுநதி, அடவிநயினார் ஆகிய ஐந்து அணைகளிலே மொத்த நீர் கொள்ளளவு 966 மில்லியன் கன அடி மட்டுமே தற்போது196 மில்லியன் கன அடி நீரை கூட இல்லை.
பூண்டி, புழல், செம்பரபாக்கம், கண்ணன்கோட்டை, வீராணம் ஆகிய ஏரிகள் நிலைமை கவலைக்குரியதாக இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 அடி உயரம் கொண்ட கெலவரப்பள்ளி அணையின் நீர் இருப்பு தற்போது 26.08 உள்ளது அதேபோல் திருச்சியில் காவிரி கொள்ளிடம் பகுதியில் நீர்மட்டம் குறைந்துள்ளது
கோவை உள்ள சிறுவாணி அணையின் உயரம் 49.50 அடி உள்ளது. தற்பொழுது நீர்மட்டம் 12 அடியாக நீர்மட்டம் உள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை உயரம் 55 அடியாக உள்ளது. தற்பொழுது 1 முதல் 40 அடி வரை சேறும் சகதியமாக உள்ளது. 15 அடி மட்டும் தண்ணீர் உள்ளது, இதனால் இரண்டாவது கூட்டு திட்டத்திற்கு தண்ணீர் எடுப்பதற்கு நிறுத்தப்பட்டுள்ளது
இது போன்ற காலங்களில் நமக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்போது நீர்த்தேக்கங்களிலே 17 சதவீதம் தான் தண்ணீர் இருப்பதால் மாவட்ட வாரியா கூட்டுகுடிநீர் திட்டம் மிகப்பெரிய கேள்வி குறிக்கிறது.
இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையிலேயே நாம் பார்த்தால் அரசு இன்னைக்கு கையாளதாக அரசாக இருக்கிறது. நீர் மேலாண்மை பூஜ்யம் மதிப்பெண்களை திமுக அரசு பெற்றிருக்கிறது என்பதை நாம் பார்க்க முடிகிறது.
19 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறைக்காக 150 கோடி ஒதுக்கியுள்ளது யானை பசிக்கு சோளப்பொறியாக உள்ளது. ஒருபுறத்திலே வெப்ப அலை இரவு பகல் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. அதனால் மின்சார தேவை, இதுவரை வரலாறு காணாத அளவிலே தேவை அதிகரித்திருக்கிறது. ஆனால் அதற்கு சமன் செய்கின்ற வகையில் உற்பத்தியை திமுக அரசு அதிகரிக்காத காரணத்தினாலே, தனியார் இடத்தில் கொள்முதல் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சோலார் பவர் சூரிய சக்தியிலிருந்து கிடைக்கக்கூடிய அதே நேரத்துல காற்றாலை மூலமாக கிடைக்க வேண்டிய மின்சாரத்திற்கு தனியார் சந்தையில் இருந்து தான் இன்றைக்கு பெரும்பகுதி வாங்குவதனால் மிகப்பெரிய அளவிலே நட்டம் ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது. மின் உற்பத்தி கையாளுவதில் இந்த அரசிலே பூஜ்ஜியம் மதிப்பு பெற்று, மக்களுடைய கடும் கோவத்துக்கு ஆளாக இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய நடவடிக்கை முதலமைச்சர் எடுப்பாரா?
எடப்பாடியார் காலத்தில் இது போன்ற சவாலான காலங்களில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் நீரை உயரசெய்து குடிநீர் பிரச்சனையும் ,மின்சார தேவையும் சரி செய்தார். திமுக அரசு செயல்படாத தன்மையினாலும், செயலிழந்த காரணத்தினாலும், மிகப்பெரிய குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது என்பதுதான் கள நிலவரம் ஆகும்.
உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு முதல்வருக்கு கசப்பாக இருந்தாலும் கூட, இனியும் அதில் இருந்து நீங்கள் விலகி செல்லாமல் உண்மையை கசப்பான மருந்தாக ஏற்றுக்கொண்டு அதற்கு நீங்கள் தீர்வு காணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுடைய தாகத்தை தீர்ப்பதற்கும், மின்சாரம் கிடைப்பதற்கும் எடப்பாடியார் எடுத்த நடவடிக்கைகளை திமுக அரசு வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.