திமுக ஆட்சியால் உலகத் தமிழினமே வெட்கித் தலைகுனிகிறது…. தமிழகத்தை குடிகார நாடாக மாற்ற முயற்சி.. ஆர்பி உதயகுமார் வேதனை…!

Author: Babu Lakshmanan
12 July 2023, 11:56 am

உலகத் தமிழினமே வெட்கிதலை குனியும் வகையில் அரசின் தவறான கொள்கையால் தமிழகத்தை குடிகார நாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:- காலையில் கண்விழித்தால் ஏழ மணிக்கே மது அருந்தலாம் என்ற நிலையை உருவாக்கி வருவது இன்றைக்கு விவாதமாக உள்ளது. காலையில் எழுந்தால் பத்திரிகை படிப்பதும், காபி அருந்துவது தான் நடைமுறையில் உள்ளது. ஆனால். திராவிட மாடல் அரசு காலையில் எழுந்தவுடன் மது அருந்தும் நிலையை கொண்டு வந்துவிடுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் முத்துசாமி அமைப்புசாரா தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் இவர்கள் மீது பழியைப் போட்டு குடிப்பழக்கம் உள்ளவர்கள் போல தோற்றம் ஏற்பட்டது போல, ஒரு ஆய்வை மேற்கொண்டு அறிக்கை விட்டுள்ளார். 

நீதிமன்றமோ, மது அருந்துவது சமூகத் தீங்கு, இதை அறவே ஒழிக்க வேண்டும். இளைஞர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கி உள்ளது எனக் கூறியுள்ளது. மதுவால் ஏற்படும் தீங்கு குறித்து எந்த விழிப்புணர்வும் செய்யவில்லை. ஆனால், டாஸ்மாக் நேரத்தை கூட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாது இன்றைக்கு தக்காளி, மிளகாய், இஞ்சி உள்ளிட்ட காய்கள் விலை ஏறிவிட்டது, இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. 

விலைவாசி குறித்து எந்த நடவடிக்கை எடுக்காத ஒரு கையாளத்தின் அரசாக உள்ளது. முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கையில் எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி உயர்வை அம்மா அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. கொரோனா கால கட்டங்களில் கூட எடப்பாடியார் விலைவாசி உயரவை ஏற்றாமல் கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால், தற்போது சாதாரண நிலையில் கூட விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. மது நேரத்தை அதிகரிக்க தொழிலாளர் மீது பணிவு சுமத்துவது வேதனையாக உள்ளது.

இது நீதிமன்றத்தையும், மக்களையும் ஏமாற்றும் செயலாகும். தமிழர்களின் பண்பாட்டை, பாரம்பரியத்தை உலகத் தமிழர்கள் எடுத்துரைத்து வருகிறனர். ஆனால் உலகத் தமிழர்களே மனம் வேதனை படும் வகையில், தமிழகம் குடிகார நாடாக மாறிவிடுமோ என்று வேலை அடைந்து வருகின்றனர், என கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 360

    0

    0