நெய்வேலியில் விவசாயம் அழிப்பு… CM ஸ்டாலினுக்கு விருதா…? மனிதராக மக்களுக்கு கடமையாற்ற தவறிவிட்டார் ; ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!!
Author: Babu Lakshmanan29 July 2023, 10:51 am
மதுரை ; மனிதராக இருந்து நாட்டு மக்களுக்கு கடமையாற்ற தவறிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- இன்றைக்கு மக்கள் வளர்ச்சி, மக்களுக்கு எதிர்கால திட்டம், மக்களுக்கான பாதுகாப்பு, உரிய வேலை வாய்ப்பு, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, இதில் ஆற்றி பணிகளும் விஞ்ஞானம், மெய்ஞானம் என அனைத்தும் துறைகளுக்கும் விருது வழங்கப்படும்.
புரட்சித்தலைவர் சத்துணவு திட்டம் வழங்கினார். அதன் மூலம் அவருக்கு சத்துணவு திட்ட சரித்திர நாயகர் விருது வழங்கப்பட்டது. உலக மதிப்பீடு ஒப்பீடு தங்க தாரகை விருது புரட்சித்தலைவி அம்மாவிற்கு வழங்கப்பட்டது. அதேபோல், எடப்பாடியாருக்கும் டெல்டா விவசாயிகள் காவிரி காப்பாளர்என்ற விருதினை வழங்கினார்கள்.
தற்போது டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இன்றைக்கு நெய்வேலி பகுதியில் விரைவில் எல்லாம் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அழிக்கும் வண்ணம் செயல்பட்டு வருவதை நீதியரசர்கள் கூட கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் முதலமைச்சருக்கு வீடு தேடி வந்த விருதின் விலை என்ன மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
மாமல்லபுரத்தில் செஸ் போட்டியை நடத்தியதற்காக ஸ்டாலினுக்கு மாமனிதர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதே மாமல்லபுரத்தில் சீன அதிபர் மாநாட்டிற்கு வந்திருந்த பொழுது, தாய் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்து என அனைவரும் பாராட்டினர். இதன் மூலம் தமிழக மக்கள் எடப்பாடியாருக்கு மாமனிதருக்கு எல்லாம் மாமனிதர் என்று விருதினை தந்தனர்.
தற்போது எல்லாம் விருது வழங்குவது விளம்பரமாக உள்ளது. அம்மாவும், எடப்பாடியாரும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை உலக அளவில், ஆசிய அளவில் எல்லாம் நடத்தினார்கள். நேரு உள் விளையாட்டு அரங்கத்தை அம்மா உருவாக்கித் தந்தார். தற்போது இவர்கள் மட்டும் விளையாட்டு போட்டியை நடத்தியது போல பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
ஒரு மனிதராக இருந்து கடமையாற்ற முதலமைச்சர் தவறிவிட்டார். சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு என இதை கூட காது கொடுத்து முதலமைச்சர் கேட்க மறுக்கிறார். இதனால் மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர், என கூறினார்.
0
0