100 சதவீதம் விதிமீறல்… போனா திரும்ப வருமா…? இத்தனை நடந்தும் ஆழ்ந்த உறக்கத்தில் திமுக அரசு… அதிமுக கடும் கண்டனம்

Author: Babu Lakshmanan
11 May 2024, 6:05 pm
Quick Share

மதுரை ; கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் பட்டாசு விபத்தில் 28 பேர் பலியான நிலையில், விதியை மீறும் ஆலைகளை கண்டுபிடித்து அரசு நடவடிக்கை வேண்டும் என்று எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-  தமிழகத்தில் இன்றைக்கு பட்டாசு ஆலைகளால் ஏற்படுகிற விபத்துகள் எண்ணிக்கை என்பது நமக்கு மிகப்பெரிய கவலை ஏற்படுத்தி நம்பிக்கை இழக்க செய்து இருக்கிறது. விதிமுறைகள் மீறினாலே ஏற்படும் இந்த தொடர் விபத்துகளிலே தற்போது  2024 ஆண்டில் இந்த 5 மாத காலங்களிலே 5 விபத்துகளில் தொடர்ந்து நடைபெற்றது.

ஜனவரியில் நடைபெற்ற விபத்தில் ஆறு பேர் பலியாகி உளளனர். மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் 3 விபத்துக்கள் நடைபெற்றதில் 12 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் காயமாய் உள்ளனர். மே மாதம் மூன்று விபத்துகள் நடைபெற்றதில் 10 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுவரை 28 பேர் பலியாகி உள்ளதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியே படுகாயம் அடைந்தவர்கள் பிழைத்தாலும் கூட அவர்களால் முழுமையாக செயல்பட முடியாமல் இருப்பதையும் நாம் கவலையோடு பார்க்க முடிகிறது.  பொதுவாக விருதுநகர் மாவட்டத்திலே சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதியில் ஆயிரத்து மேற்பட்ட ஆலைகள் உள்ளது. இந்த பட்டாசு ஆலைகளிலே எப்போதாவது எதிர்பாராது விதமாக விபத்து ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாதது. 

மேலும் படிக்க: ‘போலீஸ்கிட்டயே போனாலும் உனக்கு முடி வெட்ட முடியாது’.. பட்டியலின இளைஞருக்கு முடிவெட்ட மறுப்பு : மீண்டும் ஒரு தீண்டாமை சம்பவம்

ஆனால் இப்பொழுது தொடர்ந்து நடைபெறுகிறது. இன்றைக்கு பட்டாசு ஆலையில் விதிமுறை மீறல் அதை கண்டும் காணாமல் இருக்கிறது அரசு, இதனால் உயிர்பலி தொடர்கிறது. விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் அதை கண்துடைப்பாக தான் இருக்கிறது.

தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி இருக்கிறதா?  பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கிறதா? என்பதை தொடர் ஆய்வு மேற்கொள்வதற்கு  மாவட்ட நிர்வாகமும், அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இன்றைக்கு கண்டும் காணாமல் இருப்பதினால் உயிர்களை நாம் பலி கொடுத்திருக்கிறோம்.

இதுகுறித்து எடப்பாடியார் தொடர்ந்து பட்டாசு ஆலையில் விதி மீறல் உள்ளது ஆய்வு நடத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்துகிறார். தொழிலாளர்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக தங்கள் உயிரையே பணையம் வைத்து இந்த பட்டாசு ஆலைகளில் செயல்படுகிற போது, அதிக லாபம் நோக்கத்தோடு அதிக உற்பத்தியை இலக்காக வைத்து ஆலைகள் செயல்படுகிறபோதுதான் விதிமுறை மீறல்கள் அங்கே நடைபெறுகிறது.

பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் வைத்து முறையான விதிமுறைகளை கடைபிடித்து இந்த பணியை மேற்கொள்ளும்போது  பாதுகாப்பாக இருக்கலாம் என்பது எல்லோருக்கும் அறிந்த ஒன்று. ஆனால் விபத்து ஏற்பட்டு  நமக்கு கவலை இருக்கிற செய்தி இருக்கிறது. இந்த அரசு தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?

எத்தனை விதிமீறல் ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது அரசு தெரிவிக்கப்படவில்லை. எப்போதாவது நடப்பது என்பது நாம் அதை கடந்து செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால் எப்போதுமே விபத்துகள் நடந்து கொண்டே இருந்தால் அது எப்படி கடந்து செல்வது.
தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக, தங்கள் பிள்ளைகளுக்காக, மருத்துவ செலவுக்காக இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இறந்ததற்கு பின்பு நிவாரணம் கொடுத்தால் அந்த உயிரை நாம் மீண்டும் கொண்டு வர முடியுமா? என்பது நான் சிந்தித்து பார்க்க வேண்டும். இழந்த உயிரை மீட்க முடியாது. அதிக உற்பத்திக்காக அங்கே 100 சதவீதம் விதிமீறல்கள் மீறி அவர்கள் உற்பத்தியில் ஈடுபடுகிற போது தான், தொழிலாளர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு நிலையை நாம் பார்க்க முடிகிறது.

அரசு இன்னும் கண் தூங்கி உறக்கத்திலே ஆழ்ந்த நித்திரையில் இருந்தால் இன்னும் எத்தனை உயிர்களை இந்த தொழிலை ஈடுபட்டு இருக்கிற தொழிலாளர்களுடைய உயிர் பறிபோகிற என்கிற அச்சம், கவலை ஏற்பட்டிருக்கிறது. விதிமுறைகளை கண்டறிய ஆய்வுகளை அரசு நடத்துமா? புதிய பாதுகாப்பை தொழிலாளர்களுக்கு வழங்க அரசு முயற்சி எடுக்குமா?

பட்டாசு  ஆலையில் விபத்து ஏற்பட்ட இறந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு எடப்பாடியார் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பார இறைவனை வேண்டுகிறேன், என்று கூறினார்.

Views: - 162

0

0