தென் மாவட்டங்களில் நிவாரண உதவி வழங்குவதில் பெரும் குளறுபடி… முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan30 December 2023, 8:27 am
தென் மாவட்டங்களில் தாலுகா வாரியாக நிவாரண உதவி வழங்குவதில் பெரும் குளறுபடி நடந்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- கழக அம்மா பேரவையின் சார்பில் எடப்பாடியாரின் சார்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் பகுதியில் பாதிப்படைந்த ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி,சேலை, கைலி, கோதுமை மாவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய 1000 பெட்டிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே. தமிழரசன், எம் பி கருப்பையா மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி, மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமையா, அரியூர் ராதாகிருஷ்ணன், உசிலை டாக்டர் விஜயபாண்டியன், சிங்கராஜ பாண்டியன் உட்பட பலர் இருந்தனர்.
ஆர்.பி உதயகுமார் கூறியதாவது :- கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.தற்போது எடப்பாடியாரின் சார்பாக நாளை 5000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கழக அம்மா பேரவையின் சார்பில் ஆயிரம் குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர்,டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்யும் இந்த மழை நீரை சேமித்து வைத்து கோடை காலங்களில் குடிநீருக்கும், விவசாயத்திற்கு முறையாக பயன்படுத்த வேண்டும்.
எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் குடி மரமாத்து திட்டத்தின் கீழ் ஏரிகள், கண்மாய்களை சீரமைத்து முறையாக பாசனத்திற்கும், குடிநீருக்கும் 100 சகவீதம் பயன்படுத்தப்பட்டன. தற்போது இந்த வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர்,ஜனவரி வரை உள்ளது
கடந்த சென்னை கடலோர மாவட்டங்களில் 3, 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட போது தலைநகர் சென்னையே தத்தளித்தது.அந்த அனுபவத்தை பாடமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் 4000 கோடி செலவு செய்தோம் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிக்காது என்று வீராப்பு பேசி மக்களை வீணடித்து விட்டனர்.
அதேபோல் 16,17 ஆகிய தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கடந்த 14ஆம் தேதி அறிவிப்பு கொடுத்தும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.
குறிப்பாக தாமிரபரணியில் ஒரு லட்சம் கன அடி திறந்ததால் அதன் கிளை 5 ஆறுகள் கொள்ளளவு தாங்காமல் உடைப்பு ஏற்பட்டு, இதன் மூலம் 200 கண்மாய்கள் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து உயிர் சேதம், லட்சக்கணக்கான கால்நடைகள் சேதம்,பயிர் சேதம், வீடுகள் சேதம்,பொருள்கள் சேதம் ஏற்பட்டு மக்கள் அனைத்தையும் இழந்து நிராயுதபணியாக உள்ளார்கள் பல்வேறு பகுதிகளெல்லாம் தனித்தீவு போல் பூகம்பம் ஏற்பட்டது போல சிதலடைந்து உள்ளது.
ஆனால் அரசியல் முக்கியத்துவதற்காக ஸ்டாலின் டெல்லி சென்றார்.கூட்டணி தான் முக்கியம் என்று சென்று விட்டு மக்களை வஞ்சித்து விட்டார் மக்களுக்கு நேச கரம் நீட்டாமல் கூட்டணிக்கு நேசகரம் நீட்ட சென்று விட்டார்
தொடர்ந்து, வருகின்ற 30,31 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வடகிழக்கு பருவமழையில் அரசு இயந்திரங்கள் முழுமையாக ஈடுபடவில்லை, அதுபோல் இல்லாமல் தற்போது 30,31 ஆகிய தேதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.
விடியா திமுக அரசு தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரணத்திற்கு 6,000 ரூபாய் அறிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் வேறுபட்டு நிவாரணத்தை அறிவித்துள்ளார்கள். நிவாரண தொகையில் பெரும் குளறுபடிகள் ஏற்படுத்தி உள்ளனர். குறிப்பாக, தாலுகா வாரியாக 6000 ரூபாய், ஆயிரம் ரூபாய் என தற்போது பிரித்து வருகிறார்கள். அதேபோல், அரசு ஊழியர்கள், வருமான வரி கட்டுபவர்களுக்கு இல்லை என கூறுகிறார்கள் அவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் பயனாளிகள் அல்ல பாதிக்கப்பட்டவர்கள். இது போன்ற பாகுபாட்டை அரசு பார்க்கக் கூடாது.
அதேபோல், உப்பளங்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஏரல் பகுதியில் தொழில் நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளது. இயல்பு வாழ்வு திரும்பவே ஒரு வருடம் ஆகும்.
அதே போல், உயிர் இருந்த குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், எடப்பாடியார் 10 லட்சம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதே ஒக்கி புயலில் இறந்த மீனவர்கள் குடும்பத்திற்கு 20 லட்சம் வரை வழங்கி உள்ளோம். பொதுவாக, பேரிடர் நிவாரணநிதியிருந்து 4 லட்சமும், முதலமைச்சர் நிதியிலிருந்து 6லட்சம் என பத்து லட்சம் வழங்கலாம். கடந்த காலங்களில் இது போன்ற எடப்பாடியார் வழங்கி உள்ளார்.
தொற்றுநோய் அதிகமாக பரவி வருகிறது. உரிய முகாமை நடத்தியதாக தெரியவில்லை. தற்போது எடப்பாடியார் அவலங்களை சுட்டி காட்டுகிறார். அதற்கு ஆளுங்கட்சியின் விமர்சனம் செய்கின்றனர். இதே எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருக்கும்பொழுது, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யும் அவியலா என கூறினார்.
குறிப்பாக, எடப்பாடியார் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மக்களிடம் கருணை மழை பொழிந்திட அரசு உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் உரிய கால்நடை இழப்பு, உரிய பயிர் இழப்பு, உரிய நிவாரண இழப்புகளை எடப்பாடியார் கூறியது போல வழங்க வேண்டும்.
அதேபோல், தமிழக அரசுக்கு வேண்டிய நிதியை மத்திய அரசு தர வலியுறுத்தி எடப்பாடியார் தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்றி உள்ளார். பொறுப்பில் உள்ள திமுக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலம் நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாக உள்துறை அமைச்சர், பாரத பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து, எப்படி எடப்பாடியார் மத்திய அரசிடம் நிதியை வெற்றி பெற்று போல, திமுக அரசும் நிவாரண உதவி பெற்று மக்களை காக்க வேண்டும், என கூறினார்.