கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டுக்கு சமம்.. அதுக்காக எல்லாம் பாஜகவுடன் சேர முடியாது : செல்லூர் ராஜு விளாசல்..!!

Author: Babu Lakshmanan
12 June 2023, 5:06 pm

சினிமா நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும், அதேபோல் அதிக சம்பளம் பெறும் ரஜினியும் அரசியலுக்கு வந்து மக்கள் நல பணி திட்டம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை கோவில் பாப்பாக்குடி பகுதியில் RJ தமிழ்மணி டிரஸ்ட் சார்பில் இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. பின்னர் மருத்துவ முகாமை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது ;- 2014 ஆம்‌ ஆண்டு முதல் ஆஅர.ஜெ.தமிழ் மணி நினைவாக இலவச மருத்துவ முகம் நடத்தி ஏழை, எளிய மக்களுக்கு இலவச சிசிச்சை அளித்து வருகின்றோம்.

இதுவரை 15 ஆயிரம் பேருக்கு இலவச கண் சிகிச்சை முகாம் மூலம் அறுவை சிகிச்சை செய்து உதவி செய்துள்ளோம். அதோடு, இலவச பொது மருத்துவ முகாம் மூலம் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர்.

அதிமுக மதுரையில் ஆகஸ்டில் நடத்தும் மாநாடு தமிழகம் தழுவிய ஒரு மாநாடாக நடைபெற உள்ளது. எந்த மாதிரி மாநாடு போல் இல்லாமல் புதுமாதிரியான மாநாடு போல் நடைபெறும். மத்திய உள்துறை அமைச்சர் விமான நிலையம் வரும்போது மின்வெட்டு ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள இருளடைந்த நிலையை அவருக்கு காட்டுவது போல் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய எதிர்ப்பில் உள்ளனர். பாஜகவிற்கு முதன் முதலில் பல்லாக்கு தூக்கியது திமுக தான். அதேபோன்று காங்கிரஸுக்கும் பல்லாக்கு தூக்கி ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டது இந்த திமுக தான். கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டுக்கு சமம். கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் மட்டுமே.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசும், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளாவில் ஒருவருக்கொருவர் எதிர்த்துக்கொண்டு, தமிழகத்தில் கூட்டணி அமைப்பது கொள்கை கூட்டணியா..? அதிமுகவில் தான் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களை அமைச்சராக்கி அழகு பார்த்தது அதிமுக தான். மேலும், இஸ்லாமியர் அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கியதும், பழங்குடி சமுதாயத்தைச் சார்ந்த சங்மாவை குடியரசு தலைவராய் ஆக்கிய பெருமை அதிமுகவுக்கு உள்ளது.

அதிமுக என்பது ஒன்றுபட்டு தான் இருக்கிறது. தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திமுக 13 கட்சி கூட்டணியிடன் தான் ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வரும் போது கூட்டணி அமைப்பது வாடிக்கையான ஒன்று. நாங்கள் பாஜக கொள்கையை ஆதரிக்கவில்லை. ஆனால் கூட்டணி தர்மத்துக்காக நாங்கள் விட்டு கொடுக்கிறோம். எங்களுக்கு எதிரி திமுக தான். தன்மானத்தை விட்டு நாங்கள் பாஜகவுடன் செயல்பட மாட்டோம்.

அதிமுகவில் இளம் வாக்காளர்கள் தினம் தினம் உறுப்பினர்களாக சேர்த்து கொண்டிருக்கின்றோம். இலவச பஸ் எத்தனை நாட்களுக்கு ஒடும் என்றே தெரியாது. ரேசன் கடையில் வேளை பளு அதிகமாக இருக்கும் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. ஊழல் செய்வதற்காக பணியாளர்களை நிரப்பாமல் உள்ளது.

தம்பி விஜய் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்கிறார் என்று கேள்வி பட்டேன். அது வரவேற்கதக்க ஒன்று. விஜய் தனது பணியை தொடர வேண்டும். அதேபோல் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ரஜினியும், அரசியலுக்கு வந்து மக்கள் பணியை தொடர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

தமிழக முதல்வரே விளம்பரம் அரசியல் தான் செய்து வருகின்றார். அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழகத்தில் உள்ளரா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் கள்ளச்சாராயம் இல்லை என அமைச்சர் ஐ .பெரியசாமி கூறியதற்கு அவர் எந்த மாநிலத்தில் உள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்து மனை பற்றி எந்த பணியையும் மேற்கொள்ள வில்லை. நீட் பயிற்சி தமிழக மாணவ மாணவிகளுக்கு சரியாக வழங்கவில்லை. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவாக உப்மா கிச்சடி வழங்குகிறது. ஆனா ஜெயில் கைதிகளுக்கு சிக்கன் மட்டன் உணவு வழங்கபடுகிறது. இது என்ன நியாயம்

இந்த அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வினை ஒழிப்பதாக கூறிவிட்டு, தற்போது நீட் தேர்வுக்கான பயிற்சிகளை கூட சரிவர கொடுப்பதில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டினால் தான் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்திலிருந்து ஒருவர் கூட பங்கேற்காததற்கு உதயநிதியே காரணம். அவர் இன்னும் விளையாட்டுப் பிள்ளையாகவே உள்ளார். இந்த அரசாங்கத்தில் நிர்வாக கோளாறு தலை தூக்கி உள்ளது.
பென்னிகுயிக்கின் சொந்த முயற்சியால் முல்லைபெரியாறு அணை கட்டி 5 மாவட்ட மக்கள் பயன்பெற்று வருகின்றோம்.

அதிமுக ஆட்சியில் 142 அடி உயரம் கூட்டி உள்ளோம். திமுகவினர் சிலை வைத்ததாக பராமரிப்பு கட்டணம் கட்டாமல் விட்டு விட்டதால் பென்னி குக் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணம் கட்டாமல் விட்டதால் பூங்காவில் உள்ள சிலையை எடுக்க மேயர் உத்தரவிட்டுள்ளார். எனவே, தமிழக அரசு விரைவில் பென்னிகுயிக் சிலையை தொடர்ந்து அங்கேயே இருக்க பராமரிப்பு பணத்தை கட்ட வேண்டும், என கோரிக்கை வைத்துள்ளார்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 356

    0

    0