ரூ.1000 அல்ல.. ரூ.5000 கொடுத்தாலும் அது நடக்காது… ‘சூனா பானா’ மாதிரி பேசுகிறார் CM ஸ்டாலின்.. செல்லூர் ராஜு விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
20 July 2023, 5:40 pm

கலைஞர் உரிமைத் தொகையை வரவேற்பதாகவும், 5 ஆயிரம் கொடுத்தாலும் திமுகவிற்கு பெண்களின் வாக்கு கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை பெத்தானியாபுரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பல்வேறு துறைகளில் நடைபெறும் ஊழல், முறைகேடுகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், “முதல்வர் ஸ்டாலினுக்கு விலைவாசி உயர்வு, ஊழல் அமைச்சர்களை கட்டுப்படுத்த தெரியவில்லை. பொன்முடி மீதுள்ள ஊழலை அமலாக்கத்துறை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அமலாக்கத்துறையின் ரெய்டு டிரைலர் தான். மெயின் பிக்சர் விரைவில் வரவுள்ளது. திமுகவின் 30 ஆயிரம் கோடி ஊழலால் விரைவில் திமுக ஆட்சி வீட்டுக்கு போகும்.

டெல்லி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றதால் அதிமுகவை தேசிய நீரோட்டத்தில் இணைத்து உள்ளார். தமிழகத்திற்கு அதிமுகவால் அங்கீகாரமும், திமுகவால் அவமானமும் ஏற்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் மேகதாது விவகாரம் குறித்து பேசவில்லை. தமிழகத்தில் 20 நாட்களில் 25 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளது.

கல்லூரி மாணவர்கள் கலைஞர் வரலாற்றை படிக்க வேண்டும் என ரகசிய உத்தரவை திமுக அரசு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தை முடக்கி காவிரி ஜீவாதார உரிமையை நிலை நாட்டினார். எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தால் திமுக அரசை கண்டித்து தினம் தினம் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்,” என பேசினார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது :- ஆண்டிகள் ஒன்று சேர்ந்து மடம் கட்டியது போல எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மடம் கட்டி வருகிறார்கள். 26 கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் முடிவுகள் எடுக்கவில்லை. கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு எடுக்க முடியவில்லை.

எதிர்கட்சிகள் கூட்டணி நெல்லிக்காய் மூட்டை கூட்டணி, சரிந்து ஒடி விடும், திமுக கூட்டணி கட்சிகள் ஒன்று, இரண்டு சீட்டுக்காக வாய் மூடி மவுனம் காத்து வருகிறார்கள். தமிழக அமைச்சர்கள் எப்போது ரெய்டு வரும் என தூக்கமில்லாமல் தவித்து வருகிறார்கள், அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைத்திருக்கப்பட்டு இருந்தது.

கலைஞர் உரிமைத் தொகை வழங்குவதை வரவேற்கிறேன். ஆனால் அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வால் மாதம் 10 ஆயிரம் கூடுதலாக தேவைபடுகிறது. ஒவ்வொரு குடும்ப தலைவிக்கு திமுக 5 ஆயிரம் கொடுத்தாலும் பெண்கள் திமுகவிற்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.

திமுக அரசு பேசுவது ஒன்று, செயல்படுத்துவது ஒன்று. குடிகாரர்களை குடிகார்கள் என அழைக்க கூடாது என அமைச்சர் முத்துச்சாமி சொல்கிறார். குடிகார்களை மதுத்தியாகிகள் என அழைக்கலாம். முதல்வர் ஸ்டாலின் வடிவேலின் சுநா.பானா கேரக்டர் போல வெளியே பேட்டி கொடுக்கிறார்.

முதல்வர் ஸ்டாலினின் பில்டிங் ஸ்டார்ங், பேஸ்மட் வீக், ஊழலுக்காக கலைஞர் வழியில் ஸ்டாலின் ஆட்சி கலைக்கப்படும்” என கூறினார்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 379

    0

    0