சட்டசபையில் கேள்வி கேட்டால் தெர்மாகோல்-னு கிண்டல் பண்றாங்க.. நாங்களும் மதுரைக்காரன் தான்டா… செல்லூர் ராஜு கலகல பேச்சு..!!!

Author: Babu Lakshmanan
18 October 2023, 1:06 pm

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை குறித்து ஏதாவது கேள்வி கேட்டால், தெர்ம கோல் பற்றி பேசி நம்மளத்தான் ஓட்டுறாங்க என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:- துப்பாக்கி குண்டுக்கே டாட்டா காட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர். சதுரங்க வேட்டை திரைப்படம் போல் முதல்வர் நம்மள ஏமாற்றுக்கிறார், எனக் கூறினார்.

வாரிசுக்கு கழகத்தில் இடமுண்டா என்ற கேள்விக்கு, இந்த கழகம் சங்கர மடம் கிடையாது என்றார். அடுத்து நாளொரு மேனியும்‌பொழுது ஒரு வண்ணமுமாக மகன், பேரன் என வந்து நம்மள ஏமாற்றுக்கிறார். இதை அப்பவே தலைவர் எம்ஜிஆர் சொன்னார்.

இங்க வந்து ஸ்டாலின் பேசும்போது தெர்மக்கோல் இங்கு நிற்கிறார். அவரை எதிர்த்து பெண்ணை நிறுத்தியுள்ளதாக சொன்னார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து 25 லட்சம் மக்கள தெருவில விட்டுட்டாங்க. அப்பவே எம்.ஜி.ஆர். முதியோர் பென்சன் நூறு ரூபாய் வழங்கினார். தலைவர் கொண்டு வந்த திட்டம் இப்பவும் இருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு கல்யாணம் ஆகல. அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் கொண்டு வந்த திட்டம் தொட்டில் குழந்தை திட்டம். கொள்கை என்பது வேஷ்டி. கூட்டணி என்பது தோளில் கிடக்கும் துண்டு எப்ப வேணாலும் தூக்கி போடுவோம். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் நிறுத்தினீர்களே முதல்வரே, இது நியாயமா?

அண்ணா வளர்த்த கட்சியை இன்று குடும்ப கட்சியாக மாற்றிவிட்டனர் திமுக. திமுக ஆட்சிக்கு வந்ததும் மின்கட்டணம் உயர்வு. அதனால் வீட்டு வாடகையை உயர்த்திட்டாங்க. இந்த ஆட்சியில் கமிஷன், கரப்சன் தான். முதல்வருக்கு தைரியம். ஆமாப்பா ஐந்து வருடம் அண்ணனுக்கு பயந்து மதுரை பக்கம் வரல. ஜெயலலிதா ஆட்சியில் தான் சுதந்திரமாக மதுரைக்கு வந்தார்.

பிடிஆர் உண்மையை சொன்னார். இன்று பல்லை பிடுங்கி இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார். ஒரு திட்டம் மதுரைக்கு இல்ல. அமைச்சர்கள் ராஜினாமா பண்ணிட்டு போங்க. சட்டமன்றத்தில் ஏதாவது கேள்வி கேட்டா தெர்ம கோல் பற்றி பேசி நம்மளத்தான் ஓட்டுறாங்க.

குடிநீர் பற்றி சட்டமன்றத்தில் பேசினா, பெத்தானியாபுரம் பகுதியில் நான்கு குடிநீர் தொட்டிகள் கட்டியிருக்கிறாராம். நான்கு வார்டுக்கு மட்டும் போதுமா? நூறு வார்டுக்கும் தூய குடிநீர் கிடைக்க வேண்டாமா. அதற்கு தான் 1250கோடி ரூபாயில் முல்லை பெரியாறு கூட்டுகுடி நீர் திட்டம் கொண்டு வந்தார் எடப்பாடியார். யப்பா ஜோரா கைத்தட்டுங்கப்பா. வரவர மாறப்போகிறது. சதுரங்க வேட்டையில் எடப்பாடியார் பின்னி எடுக்க போகிறார்‌. என்றார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் டாக்டர் சரவணன், அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் முத்துவேல், கருப்புசாமி, மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி மற்றும் திரளான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?