இது ரொம்ப கேவலமான செயல்… இனி திமுக நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் ; செல்லூர் ராஜு காட்டம்..!!

Author: Babu Lakshmanan
17 August 2023, 4:03 pm

மதுரை ; திமுக நீட் தேர்வை ரத்து செய்ய குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் போராட்டம் நடத்த வேண்டும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் ஆகஸ்ட் 20ல் நடைபெறும் அதிமுக பொன்விழா மாநாடு விளம்பர அனுமதி தொடர்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதனை அதிமுக முன்னாள் அமைச்சர் சந்தித்து பேசினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியதாவது :- அதிமுக மாநாடு நடைபெறும் நாளில் திமுக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக அறிவித்தது சீப்பான, தரக்குறைவான செயலாகும்.

நீட் தேர்வு ரத்து செய்ய தமிழகத்தில் போராட்டம் நடத்துவது எந்தவொரு பயனுமில்லை. திமுக நீட் தேர்வை ரத்து செய்ய குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் போராட்டம் நடத்த வேண்டும்.

திமுகவால் தான் நீட் தேர்வு நடைமுறை கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மக்களிடத்தில் நம்பிக்கையை பெற முடியாது. மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். திமுகவின் நாடகத்தை நம்ப மாட்டார்கள், என கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 366

    0

    0