திராவிட மாடல் என்கிற ஒன்றே இல்லை.. ஆளுநர் கருத்திற்கு ஆதரவா..? செல்லூர் ராஜு அளித்த பரபரப்பு பேட்டி..!!

Author: Babu Lakshmanan
6 May 2023, 4:02 pm

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிழ்கவை அரசு முறையாக கண்காணிக்காததால்தான் உயிரிழப்பு நிகழ்ந்தது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- 10 லட்சம் பேர் பார்த்து அக மகிழும் சித்திரை திருவிழாவில் இந்தண்டு மிக மோசமாக விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். மனவருத்தத்தோடு இதனை சொல்கிறேன்.

திருவிழாக்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரவுடிகளை பிடித்து முன்னெச்சரிக்கையாக சிறையில் அடைப்பார்கள். அசம்பாவித சம்பவத்தோடு, அறியாமையில் இந்த அரசு உள்ளார்கள். முழுக்க முழுக்க உயிரிழப்புக்கு அரசாங்க குறைபாடே காரணம். வரலாற்றில் இதுவரை துயர சம்பவங்கள் நடந்ததில்லை. வரலாற்றில் இப்போது மட்டுமே இவ்வாறு நடக்கிறது.

250 மீட்டர் பகுதியில் 3பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு நடந்துள்ளது. செயின் பறிப்புக்கு வந்த நபர் கோவிந்தா கோவிந்தா என சொல்லி சென்றுவிட்டனர். அதிமுக ஆட்சியில் தண்ணீர் அதிகமாக வந்த போது உயிரிழப்பு இல்லை. இப்போது தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆட்சியும், நிர்வாகமும் குளறுபடியும், குழப்பமும் உள்ளது.

இந்தியாவுக்கு முன்னோடி சிறப்பாக அரசு உள்ளது என முதல்வர் மட்டுமே சொல்லுகிறார். திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிகளுக்கு விஐபி பாஸ் ரத்து செய்ய வேண்டும். இறந்தவர் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் அரசு கொடுக்க வேண்டும். ஆற்றுக்குள் இறங்குபவர்களை காவல்துறை கண்டித்து எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும். ஆற்றில் அழகர் மட்டும் தான் இறங்க வேண்டும். ஆனால் எல்லோரும் இறங்குகிறார்கள்.

எங்கள் ஆட்சியில் சாரம் கட்டி தனி வழியில் சென்றனர். இப்போது, அழகருக்கு முன்பாகவே இவர்கள் இறங்கிவிடுவார்கள். ஏழைகளுக்கு பாதுகாப்பில்லாத தன்மையே திராவிட அரசு. திராவிட மாடல் ஒன்றும் இல்லை. ஆளுநர் கருத்தை ஆதரிக்கவில்லை. ஆளுநரை திமுகவினர் விமர்சனம் செய்யும் போது ஆளுநர் எப்படி சும்மா இருப்பார். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் வெளிப்படைத் தன்மையில்லை.

மீனாட்சி சுந்தரேசுவரர், அழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் விஐபி தரிசனங்களை திருப்பதி போல் ரத்து செய்ய வேண்டும். நான் என் தாயுடன் சென்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், அழகர் தரிசனம் செய்து எனக்கு மொட்டை எடுத்து இருக்கோம் அப்போது அவ்வளவு கூட்டம் இருக்கும், அப்போது கூட இது போன்ற சம்பவம் நிகழவில்லை.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிழ்கவை அரசு முறையாக கண்காணிக்காததால்தான் உயிரிழப்பு நிகழ்ந்தது. கடந்த ஆண்டு 2 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 5 பேர் உயிரிழப்பு. தடுப்பு அணையின் 250 மீட்டர் பகுதியிலேயே 3 பேர் இறந்து உள்ளன.
இந்த அரசு வாய் சவடாலான அரசாக இருக்கே தவிர செயலில் இல்லை. 100க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு நிகழ்ந்ததாக தகவல் வந்தது, என்றார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 380

    0

    0