சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும் மத்தியில் மாட்டிக்கிட்ட ஆட்டுக்குட்டி தான் அண்ணாமலை ; செல்லூர் ராஜு விமர்சனம்!!
Author: Babu Lakshmanan16 April 2024, 11:02 am
சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும் மத்தியில் ஆட்டுக்குட்டி போல் மாட்டிக் கொண்டுள்ளார் அண்ணாமலை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை பாராளுமன்றம் தேர்தல் முன்னிட்டு மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரிடமும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு இறகு பந்து கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த நபர்களுடன் இணைந்து வேட்பாளர் சரவணன் மற்றும் செல்லு ராஜு இருவரும் சேர்ந்து விளையாடி அசத்தினர்.
மேலும் படிக்க: மோடியின் அப்பட்டமான சதி… இப்போது விழித்து இருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை : CM ஸ்டாலின்..!!
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு கூறியதாவது :- திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் நன்றாக கதை எழுதினார். இப்போது கதையில் சரக்கு இல்லை. சரக்கு முருக்கா… செட்டியார் முருக்கா… என்று பழமொழி உண்டு.
திமுக கூட்டணியில் சரக்கும் இல்லை செட்டியார் முறுக்கு இல்லை. எங்கள் வேட்பாளர் சரவணன் நல்ல சரக்கு பொதுச்செயலாளர் செட்டியார் முறுக்கு. தமிழகத்தில் அண்ணாமலை மாட்டிக் கொண்ட ஆடு போல் இருக்கிறார். ஒரு பக்கம் சிங்கம், ஒரு பக்கம் சிறுத்தை. இந்த இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்ட ஆட்டுக்குட்டி போல் அண்ணாமலை இருக்கிறார்.
எங்கள் தலைவர் எம்ஜிஆர்-க்கு நம்பியார், பிஎஸ் வீரப்பன் மனோகரனை போல் வலுவான வில்லன்கள் போல் இருக்கும் திமுக தான், எங்களுக்கு எதிரி மற்றவர்கள் எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி. மதுரையில் நோட்டாவை விட பாஜக குறைந்த ஓட்டு வாங்க போகிறது.
மதுரை ஆன்மீக பூமி என்று கூறி ஓட்டு வாங்கி விடலாம் என்று பாஜக நினைக்கிறார்கள் அந்த கதை இங்கு செல்லாது. ட்ரெய்லர் நன்றாக இருக்கும். ஆனால் படம் flop ஆகிவிடும். அது போல் தற்போது பாஜக கூறுவது அனைத்தும் ட்ரெய்லர், முடிவு flop ஆகிவிடும். ஒரு மாவட்டத்திற்கு செல்லும்போது அந்த மாவட்டத்திற்கு ஏற்பது போல் மோடிக்கு எழுதிக் கொடுக்கிறார்கள்.
பாமரனாக கேள்வி கேட்கிறேன், ஐயா மோடி ஐயா, அவர்களே, ஏன் பத்தாண்டு காலங்களாக காமராஜரை போல் எம்ஜிஆரை போல் ஆட்சி தரவில்லை. இதுவரை தரவில்லை. இனிமேல் கொடுக்கப் போகிறோம் என்றால் என்ன அர்த்தம். மக்களை ஏமாற்றுகிறார்கள். எப்படி இருந்த மனிதன் இன்று பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு அவர் நிற்கும் காட்சியை பாருங்கள்.
மேலும் படிக்க: ‘நீங்க தான் சினிமாவை குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா’…? ரெட் ஜெயண்ட் நிறுவனம் மீது நடிகர் விஷால் தாக்கு..!!!
பலாப்பழம் பழுக்காது அழுகி போய்விடும். நாடாளுமன்ற பதவிக்காக மானம், ரோஷம் இழந்துவிட்டார் ஓபிஎஸ். அண்ணாமலை, பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை பற்றி எவ்வளவு இழிவாக பேசியுள்ளார். எங்களுக்கும் அவருக்கும் என்ன சொத்து பிரச்சனையா?.
ஓபிஎஸ் அவர்களை இந்த நாட்டிற்கு தெரிகின்றது என்றால், மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். இன்று ஊடகங்கள் கூறுகின்றது. அதற்கு காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்தத் தலைவியை கொச்சைப்படுத்தியவுடன் சேர்ந்து வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ், எனக் கூறினார்.