செந்தில் பாலாஜியின் காவல் 27வது முறையாக நீட்டிப்பு…. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Author: Babu Lakshmanan18 March 2024, 7:07 pm
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 27வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, நீதிமன்ற காவல் 26 முறை நீட்டிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜி தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது வருகிற 21ம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 27-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.