கோவை ; டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் தொடர்ந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:- தமிழகத்தில் கல்குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 ஆயிரம் கல்குவாரிகள், 3 ஆயிரம் கிரசர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கோவையில் இருந்து 5000 லோடு கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் குறித்து அரசின் கவனத்திற்கு வந்ததா? என தெரியவில்லை. அரசு எதிலும் கவனம் செலுத்தவில்லை. டாஸ்மாக் பிரச்சனையை விட இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது. அரசிற்கு கட்டும் தொகையை விட அதிகமாக இலஞ்சம் வசூலித்து இந்த துறையை முடக்கி விட்டனர். எம் சாண்ட் குவாரிகளை முடக்கி மீண்டும் மணல் குவாரிகள் அமைக்கும் வாய்ப்பை இந்த அரசை உருவாக்கியுள்ளது. கேரளாவில் இருந்து ஒரு லோடு மணல் கூட எடுத்து வர முடியாது. தமிழகத்தில் இருந்து கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆளுநர் தலையிட்டு கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்துபவர்கள் மற்றும் பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அம்மா சிமெண்ட் குறைந்த விலையில் வழங்கப்பட்டது. திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்கியுள்ளது. திமுக அரசு எதுவும் செய்யவில்லை, என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்க துறை நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறி செந்தில்பாலாஜி குறித்து பேசாமல் சென்றார், எனக் கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.