வேட்பாளரை அறிவித்த மறுநாளே முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு ; துணிச்சலாக இபிஎஸ் சொன்ன வார்த்தை..!!

Author: Babu Lakshmanan
21 March 2024, 5:07 pm

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு உள்ளிட்ட அமலாக்கத்துறை நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கரின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தற்போது தேர்தல் பணிகளின் காரணமாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய விராலிமலை எம்எல்ஏவுமான டாக்டர் சி விஜயபாஸ்கர் சென்னையில் தங்கியிருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலையில் அவரது தந்தையார் சின்னத்தம்பி மற்றும் அவரது தாயார் அம்மாக்கண்ணு ஆகியோர் வீட்டில் இருந்தபோது, அமலாக்கத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்குழுவில் மதுரையில் மதுரையில் இருந்து 15 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட அளவில் உள்ள அதிமுகவினரும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களும் வீட்டின் முன் குவிந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வேட்பாளர் தேர்வு, வேட்பு மனு தாக்கல், கட்சியினரை ஒருங்கிணைத்தல் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சு வார்த்தை என வினாடிப் பொழுதையும் வீணாக்காமல் விஜயபாஸ்கர் செயல்பட வேண்டிய நேரத்தில் இப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் ரேட் நடத்திக் கொண்டிருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு உள்ளிட்ட அமலாக்கத்துறை நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சகோதரர் விஜயபாஸ்கர் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம், எனக் கூறினார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 225

    0

    0