அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-உடன் திடீர் சந்திப்பு : பண்ணை வீட்டில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2022, 9:08 pm

தேனி : அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வருகின்றனர்.

அதிமுகவில் சசிகலா மீண்டும் இணைவது குறித்த விவாதங்கள் கருத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் ஓபிஎஸ், மறுபக்கம் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் நிலை குறித்து அக்கட்சி நிர்வாகிகள் ஒற்றை தலைமையே கட்சியை நிர்வகிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சசிகலாவை சந்தித்த ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவருடன் சசிகலாவை சந்தித்த தேனி மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் தேனி முருகேசன், தேனி மாவட்ட மீனவரணி பிரிவு செயலாளர் வைகை கருப்பு ஜீ உள்ளிட்ட நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று நீக்கப்பட்ட தேனி முருகேசன், வைகை கருப்பு ஜீ ஆகியோர் தற்போது ஓ.பி.எஸ்-ஸை சந்திப்பதற்காக அவரது பண்ணை வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…