நிலச்சரிவு ஏற்படும்… மக்கள் உயிரிழக்ககூடும் : கேரளாவை முன்பே எச்சரித்தோம்.. கொதிக்கும் அமித்ஷா…!!

Author: Sudha
31 ஜூலை 2024, 3:07 மணி
sdf
Quick Share

கேரளா வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இன்னும் பலரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது காணாமல் போனவர்களின் உடல்களைத் தேடும் பணி நடை பெற்று வருகிறது.

இந்நிலையில் ராஜ்யசபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே கேரளாவுக்கு எச்சரிக்கை விடுத்தோம். 7 நாளுக்கு முன்பே , ஜூலை 23 ல் மத்திய அரசு தகவல் அளித்தது. 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 27 ஆம் தேதி 20 செ.மீ க்கு மேல் மழை பெய்யும் , நிலச்சரிவு ஏற்படும், மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முன்கூட்டியே எச்சரிக்கை தரப்படவில்லை இந்த எச்சரிக்கை அமைப்பு என்ன ஆனது என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.2014க்கு பிறகு இந்த அமைப்புக்காக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது என அமித்ஷா தெரிவித்தார்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 372

    0

    0