உச்சகட்ட பரபரப்பு.. அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கு : அடுத்தடுத்து திமுக எடுத்த முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2023, 12:02 pm

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின், சொத்து விவரங்கள் என கூறி அண்ணாமலை அண்ணாமலை பல விவரங்களை வெளியிட்டார்.

இதற்கு திமுக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என தனது வழக்கறிஞர் மூலம் அண்ணாமலை தெரிவித்திருந்தனர்.

அதே போல டிஆர் பாலு, கனிமொழி, ஆர்எஸ் பாரதி, உதயநிதி ஆகியோர் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தனர்.

ஆனால் எதற்கும் முடியாது என அண்ணாமலை பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu