கர்நாடக தேர்தலில் தோல்வி… அண்ணாமலை சொன்ன வார்த்தை : பரபரப்பு ட்வீட்!!!
Author: Udayachandran RadhaKrishnan14 May 2023, 11:12 am
தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் கர்நாடக, இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து தென் மாநிலங்களில் உள்ள தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டது.
மேலும் இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி 20 முறைக்கும் மேல் கர்நாடகவில் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பொறுப்பாளாரக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து கடந்த 10 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இந்தியாவே எதிர்பார்த்த தேர்தல் முடிவு நேற்று வெளியானது.
இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கவுள்ளது. கர்நாடகவில் ஆட்சியில் இருந்த பாஜக 66 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கர்நாடாகவில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்ற கனவு கனவாகவே போனது.
இந்த தோல்வி கர்நாடக பாஜகவினர் மட்டுமில்லாமல் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இந்தநிலையில் கார்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் கர்நாடக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வாழ்த்துகள்.
\
இந்த தேர்தலில் கர்நாடக பாஜகவோடு இணைந்து பணியாற்றயது பெரும் பாக்கியம். கர்நாடக பாஜகவினர் கடின உழைப்பாளிகள், மீண்டும் வலுவாக வருவோம். கர்நாடக மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அவர், கர்நாடக மக்களின் குரலுக்கு செவிசாய்க்கிறோம். மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம் என அண்ணாமலை கூறியுள்ளார்.