தன்னை பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக பிரபல செய்தி சேனலுக்கு எச்சரிக்கை விடுத்து பெண் சாமியார் அன்னபூரணி ஆவேசமாக வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் அன்னபூரணி அரசு அம்மா என்னும் பெண் சாமியார் பிரபலமாக பேசப்பட்டு வந்தார். சினிமாவில் வரும் அம்மனை போல தலையில் கிரீடம் வைத்து தனது சீடர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
சுதந்திர தினத்தன்று அம்மன் வேடம் பூண்டு ஆசிரமத்தில் அருளாசி வழங்கியது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இவரது செயலை விமர்சித்தும், கிண்டலடித்தும் பல்வேறு செய்தி சேனல்கள் அதனை செய்தியாக வெளியிட்டன.
இதனை பார்த்து கோபமடைந்த அன்னபூரணி, சம்பந்தப்பட்ட செய்தி சேனலை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது :- ஒரு நியூஸ் சேனலில் இருந்து போன் செய்தீர்கள் என்பதால் தான், மதிப்பு கொடுத்து , பொறுமையாக பதில் கொடுத்தேன். ஒளிபரப்பினால், அதை முழுமையாக ஒளிபரப்புங்கள்; அதை விட்டு விட்டு உங்களுக்கு தேவையானதை எடிட் செய்து ஒளிபரப்புகின்றனர். நீங்கள் கேள்வி கேட்ட விதத்திலேயே உங்கள் தரம் மக்களுக்கு தெரிந்திருக்கும்.
ஒரு நியூஸ் சேனல் மாதிரியா கேள்வி கேட்குறீங்க, ஒரு நியூஸ் சேனல் மாதிரியா அதை ஒளிபரப்பு பண்றீங்க. ஆரம்பத்திலிருந்தே அவதூறாக தான் சித்தரித்து போடுறீங்க. எல்லா சேனலும் தான் தர்ஷன நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். நடப்பதை தான் ஒளிபரப்பு செய்கிறார்கள்.
ஆனால், நீங்கள் மட்டும் தான் நேரில் வந்து கண்ணால் பார்த்து. எடுத்துட்டு போய் தவறா தான் சித்தரித்து போடுறீங்க. நீங்க அவதூறா போட்ட அத்தனை செய்திக்கும் காலம் பதில் சொல்லிவிட்டது. நான் ஏற்கனவே சொன்னது தான், இயற்கை எதற்காக வந்ததோ, அதன் வேலையை நிறைவேற்றி தான் போகும். அதை யாரும் எதிர்த்து போராட முடியாது. அந்த இயற்கையை உணர ஒரு தகுதி வேண்டும். எல்லாரும் அதை உணர முடியாது. இன்னும் இயற்கை அதற்கான பதிலை தரும். அதற்கு ரொம்ப காலம் ஆகாது, கூடிய விரைவில் விரைவில் பதில் சொல்லும்.
இனி அந்த சேனலுக்கு என் ஆசிரமத்தில் அனுமதியில்லை. எதற்குமே என் ஆசிரமத்திற்குள் அந்த சேனல் வர முடியாது. இன்னும் சில யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. அவர்களுக்கு ஆன்மிகத்தை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. அங்கே வந்து, நடக்கிற பக்தி பூர்வமான நிகழ்வில் கலந்து கிட்டு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில்லை. இருக்கிற இடத்தில் இருந்து, எங்கள் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்களை எடுத்து, பின்னணி குரல் கொடுத்து ஒளிபரப்புகிறார்கள். அவர்கள் எல்லாம் தெருவில் போகும் நாய்களுக்கு சமம். அதுகளுக்கு பதில் அளிப்பதே வேஸ்ட், எனக் கூறியுள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.