உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் : விஜய்யை விமர்சித்த நடிகர்!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2024, 1:16 pm

உன் கூடவுமா அரசயில் பன்னனும் பாவம் அரசியல் என தவெக மாநாட்டில் விஜய் பேச்சை கிண்டலடித்து பிரபல நடிகர் விமர்சித்துள்ளார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழுப்புரம் விக்கிரவாண்டி வி சாலையில் நடந்த இந்த மாநாட்டில் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் என பல லட்சம் பேர் பங்கேற்றனர்.

மாநாட்டில் விஜய் பேசிய அரசியல் பேச்சு, ஆளும் திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, திமுகவையும் அவர் விமர்சித்து பேசியது வைரலாகி வருகிறது.

அதே சமயம் அவர் சொன்ன கோட்பாடுகள், கொள்கைகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் தனது X தளப்பக்கத்தில், யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. என விமர்சித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி