மனிதநேயம் பற்றி பேசிய மாணவன் ஒரு சினிமா பிரபலமா…? வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை…!!! ஓயாத Toolkit பிரச்சனை…

Author: Babu Lakshmanan
4 March 2022, 6:11 pm

பொதுவாக ஒரு விஷயத்தை மறக்கடிக்கவோ, மறைக்கவோ செய்ய மற்றொரு விஷயத்தை டிரெண்டாக்குவது அரசியலின் மாஸ்டர் பிளானிங் ஆகும். இதனை Toolkit என அழைக்கின்றனர். இதற்காகவே, அரசியல் கட்சிகள் தொழில்நுட்ப பிரிவு, அதாவது ஐடி விங்-கை நியமித்து செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்திலேயே ஐடி விங்கில் வலிமையாக இருப்பது திமுகதான்.

தற்போது, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகதான் தற்போது Toolkit விஷயத்தை செய்து வருவதாக பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதாவது, மனிதநேயம் பற்றி பேசிய அப்துல்கலாம் என்னும் சிறுவனின் பேச்சையும், செயலையும் மக்களின் கவனத்தில் கொண்டு பெறச் செய்து, தமிழக அளவில் அதிகம் பேசப்பட்டான். இந்த சிறு வயதில் இவ்வளவு தெளிவான பேச்சு இருப்பதைக் கண்டு அனைவரும் நெகிழ்ந்து போயினர்.

இந்த நிலையில், மனிதநேயம் பற்றி பேசிய சிறுவன் அப்துல்கலாம், நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹே சினாமிகா’ படத்தில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இது நெட்டிசன்களிடையே கடும் விமர்சனத்தையும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக திட்டமிட்டே ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டை பேச செய்து, அதனை பிரபலமாக்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு, மகளிருக்கு ரூ. 1000 ஊக்கத்தொகை , கல்விக்கடன் ரத்து, நகைக்கடன் ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும், பொங்கல் பரிசில் மெகா ஊழலை மறைக்கவும், மாணவன் அப்துல்கலாமை Toolkitஆக வைத்து தமிழக அரசு சில விவகாரங்களை திசை திருப்பி விட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அதோடு, ஏர்திங் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்யானந்தாவின் சாதனையை மழுங்கடிக்கச் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

சிறிய யூடியூப் சேனல் எடுத்த வீடியோவின் மூலம் பிரபலமான அந்த சிறுவனுக்கு, தமிழக அரசு கொடுத்த பரிசுதான் வீடு என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதேபோல, செங்கல்பட்டு மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை, அனைவருடனும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை என்று அந்தப் பெண் வேதனையுடன் யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்தார்.

பழங்குடி பெண் அஸ்வினி வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் : அதிகாரிகளுக்கு கொடுத்த Silent Message என்ன ?

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அமைச்சர் சேகர் பாபு அந்தப் பெண்ணுடம் அமர்ந்து உணவு உண்டதுடன், அரசு சார்பில் அந்தப் பெண்ணுக்கு வீடு வழங்கியது. இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கே சென்று சந்தித்து வந்தார்.

இந்த செய்தியும் மக்களிடையே நல்ல வைரலாகியது. இதுவும் திமுகவின் Toolkit விவகாரம்தான் என்று எதிர்கட்சியினரும், நெட்டிசன்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு திமுக மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே, இன்னும் 4 ஆண்டுகளில் இன்னும் எத்தனை Toolki-களை திமுகவினர் கொண்டு வரப்போகிறார்களோ..? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/iam_udaiyar/status/1499586270669930501
  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!