இப்படி ஒரு பெருந்துயரம் யாருக்கும் வந்துவிடக்கூடாது.. நிலச்சரிவும்.. விபத்தும் : உருக்குலைந்த கேரளப் பெண்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2024, 7:59 pm

கேரளாவில் அம்பலவாயல் பகுதியை சேர்ந்த ஜென்சன், வயநாட்டை சேர்ந்த ஸ்ருதி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்கவே, இந்த மாதம் திருமணம் நடத்திக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருங்கால வாழ்க்கையை நினைத்து காத்திருந்த ஸ்ருதிக்கு, பேரிடியாக வந்தது நிலச்சரிவு. கடந்த ஜூலை மாதம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் தாய், தந்தை என 9 குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்த ஸ்ருதி சோகத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

ஸ்ருதியின் நிலைமையை புரிந்து கெர்ணட ஜென்சன், ஆறுதல் சொல்லியும் தேற்றி கொண்டு வந்தார். ஆறாத வடுவில் இருந்து மீண்டு வர சிரமப்பட்ட ஸ்ருதிக்கு பக்கபலமாக இருந்துள்ளார் ஜென்சன்.

இதையடுத்து ஜென்சனுக்கு ஸ்ருதியுடன் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து வைக்க ஜென்சனின் பெற்றோர்கள் முடிவு எடுத்தனர்.

இந்த நிலையில் அவர் வாழ்க்கையில் மற்றொரு பேரதிர்ச்சி காத்திருந்தது. திருமண ஏற்பாடுகள் களைகட்ட, நேற்று இருவரும் ஒன்றாக காரில் பயணித்த போது, கார் விபத்தில் சிக்கியது.

இதில் படுகாயமடைந்த ஜென்சன் உயிரிழக்க, ஸ்ருதி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.

தனது எதிர்கால கணவனை இழந்துவிட்டோம் என கடும் அதிர்ச்சியில் உள்ள ஸ்ருதி இந்த துயரத்தில் இருந்து மீள்வாரா என்பது சந்தேகம்தான் என சோகத்தில் மூழ்கியுள்ள அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்தை நிலச்சரிவு அபகரித்த நிலையில், எதிர்கால கணவனை நினைத்து கொஞ்சம் உயிர்ப்புடன் இருந்து ஸ்ருதிக்கு விபத்தே வாழ்க்கைக்கு ஆபத்தாக முடிந்துள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஸ்ருதிக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்த சோகமான நேரத்தில் ஜென்சனின் குடும்பத்திற்கும், ஸ்ருதிக்கு கேரள மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல நடிகர் மம்முட்டி, மருத்துவ சிகிச்சை செய்தும், பலர் பிரார்த்தனை செய்தும், ஜென்சன் உயிரிழந்தது துரதிர்ஷ்டம் என்றும், ஸ்ருதிக்கு கற்பனை செய்ய முடியாத வேதனை என இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ