இரு கைக்குழந்தைகள் உள்பட 4 பேர் எரித்துக் கொலை : கடலூரில் பயங்கரம்… விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
8 February 2023, 2:19 pm

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட செல்லாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், ஹாசினி என்ற 8 மாத குழந்தையும் உள்ளனர்.

இந்த சூழலில் தமிழரசியின் சகோதரியான தனலட்சுமிக்கும், அவரது கணவர் சத்குருவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், அவர் தனது குழந்தையை எடுத்துக் கொண்டு தனலட்சுமி வீட்டிற்கு வந்து வசித்து வந்துள்ளார். மேலும், சத்குருவின் மீது தனலட்சுமி போலீசிலும் புகார் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், மனைவியின் மீது கோபத்தில் இருந்த சத்குரு, இன்று திடீரென தமிழரசியின் வீட்டுக்கு வந்து தனலட்சுமியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனலட்சுமி மற்றும் அவரது குழந்தையின் மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதனை தடுக்கச் சென்ற தமிழரசி, தமிழரசியின் குழந்தை ஹாசினி மற்றும் சத்குருவின் மீதும் அந்த பெட்ரோல் விழுந்ததாக சொல்லப்படுகிறது.

இதில் தமிழரசி, தமிழரசியின் குழந்தை ஹாசினி, தனலட்சுமி, தனலட்சுமியின் 4 மாத குழந்தை மற்றும் சத்குரு என 5 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும், அந்த வீட்டில் உள்ள இருவர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 544

    0

    0