பிரபல நடிகருக்கு திடீர் உடல்நலக்குறைவு : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. வெளியான புகைப்படம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 5:10 pm

பிரபலங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கேள்விப்பட்டாலே ரசிகர்கள் என்ன ஆனது என பயப்படுவார்கள். அப்படி இப்போது ஒரு பிரபலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

அவர் வேறுயாரும் இல்லை இயக்குனரும், நடிகருமான மனோபாலா அவர்கள் தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருக்கும் மனோபாலாவை நேரில் நடிகர் சங்க தலைவர் பூச்சி முருகன் அவர்கள் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!